கலைஞரின் சூரியனி… நீ…
கலைஞரின்
சூரியனி…
நீ.
@@@@@@@@@@@@
கலைஞரின்
இலக்கிய
மகள்
நீ.
தடையிலா
அன்பினை
இறுதி வரை
உனக்கென
அள்ளித் தந்து
கொண்டேயிருந்த
தகை சான்ற
தகப்பன் சாமி
அந்தக்
கலைஞர்…
குடும்பம்
இலக்கியம்
அரசியல்
என்று
சுழன்று வரும்
சுந்தரச்
சூறாவளி
நீ.
பெண்
என
நீ
பிறந்து
விட்டதாலேயே
உன்
மீதாக
எத்தனை
எத்தனை
வன்மங்கள்
நிறைந்த
வகை வகையான
வசையாடல்கள்…
அத்தனை
வசைகளையும்
மௌனித்து
உள்வாங்கி
உணர்ச்சி
வசப்படாமல்…
ஒரு
வார்த்தை கூட
மறு மொழி
கூறாமல்
உந்தன்
சுட்டும்
விழிச்
சுடரால்
சுட்டெரித்துச்
செல்கின்ற
கலைஞரின்
சூரியனி
நீ.
எதிர்
தரப்பின்
அத்தனை
வன்மமான
வசையாடல்களையும்
உந்தன் மென்
புன்னகையினால்
புறமுதுகிட்டு
ஓட வைக்கும்
புதிய
புறநானூற்று
மங்கை
நீ.
வாழ்த்துகள்…
@@@
ஸ்ரீரங்கம்
திருநாவுக்கரசு,
உழைக்கும்
மூத்த இதழியலாளர்.