அங்குசம் சேனலில் இணைய

அனுபவங்கள் ஆயிரம் (03) – இயற்கை, வரலாறு மற்றும் ஆன்மீகம் ஒன்றிணையும் புனித நிலம்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நீண்ட நாட்களாக கன்னியாகுமரிக்குப் பயணம் செய்யும் ஆசை இருந்தது. சில காரணங்களால் அது நீண்டு வந்தது. ஆனால் இப்போது அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறப்பட்டது.

இது எனது மிகவும் எதிர்பார்த்த சுற்றுலா. விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும், கலங்கரை விளக்கமும், குமரி அம்மன் கோயிலும் நேரில் காணும் சுவாரஸ்யம் சொல்லி முடிக்க முடியாதது. நான் பார்க்க விரும்பும் இடங்கள் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் – சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த இடம், திருவள்ளுவர் சிலை – தமிழின் பெருமையும் திருக்குறளின் தத்துவத்தையும் பிரதிபலிக்கும் உலகப் புகழ்பெற்ற சிற்பம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கன்னியாகுமரி போறீங்களா? சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்... இனி சொகுசு  கப்பலில் பயணிக்கலாம்! - luxury boat service from kanyakumari to vattakottai  resume - Samayam Tamilஅருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் – மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித தலம். சூரிய உதயக் காட்சி – இந்தியாவின் தென் முனையில் இருந்து காணக்கூடிய அற்புதமான அனுபவம், பௌர்ணமி நாட்களில் சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் மாத்தூர் தொட்டிப் பாலம் போன்ற கட்டிடக் கலை அற்புதங்களையும் பார்க்கத் திட்டமிட்டுள்ளேன்..

கன்னியாகுமரி என்பது ஒரு சாதாரண பேரூரல்ல; அது இயற்கை, வரலாறு மற்றும் ஆன்மீகம் ஒன்றிணையும் புனித நிலம். கடலின் அலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் அந்த காட்சி என் நினைவில் என்றும் அழியாத ஒரு அனுபவமாக நிற்கும் ..

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கன்னியாகுமரியில் உள்ள பழமையான பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட  திட்டமிடப்பட்டுள்ளது.இதோ நான் இப்போது திருவள்ளுவர் சிலை மிக அருகில்…. இதன் சிறப்பை விரிவாக பார்ப்போம்.

கன்னியாகுமரி கடற்பகுதியில் விளங்கும் திருவள்ளுவர் சிலை, தமிழின் செம்மொழி செல்வத்தையும் திருக்குறளின் தத்துவச் சிந்தனையையும் உலகுக்குக் காட்சிப்படுத்தும் சிற்பக்கலைச் சுடர் ஒளியாக திகழ்கிறது. இது தமிழகத்தின் பெருமைக்குரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும் .

வரலாற்று பின்னணி :

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருக்குறள் இயற்றிய மரபுத்தமிழ் மெய்யுணர்வுப் புலவர் திருவள்ளுவரை மக்களிடையே நிலைநாட்டும் நோக்கில், 133 அடி உயரத்தில் அமைந்த இந்தச் சிலை 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று கட்டத் தொடங்கி, 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று தமிழக முதலமைச்சர் எம். கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . இதை வடிவமைத்தவர் சிற்பக் கலைஞர் டாக்டர் வி. கணபதி ஸ்தபதி .உயரம் மற்றும் வடிவமைப்புமொத்தம் 133 அடி (41 மீட்டர்) உயரமுள்ள இந்தச் சிலை, திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கிறது. 95 அடி உயரம் கொண்ட சிலையின் மீது 38 அடி உயர பீடம் அமைந்துள்ளது; இது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 தலைப்புகளை குறிக்கிறது. ஷ

肯亞庫瑪利, 印度)Thiruvalluvar Statue - 旅遊景點評論- Tripadvisorமேலுள்ள சிலை ‘பொருள்’ மற்றும் ‘இன்பம்’ என்னும் இரண்டு புலங்களையும் பிரதிபலிக்கிறது . சிலையின் மொத்த எடை சுமார் 7000 டன். இதன் இடுப்புப் பகுதி சிறிது வளைந்து காணப்படுவது இந்து தெய்வமான நடராஜரின் நடன நிலையை நினைவூட்டுகிறது . பீடத்தின் சுற்றிலும் 10 யானைகள் 8 திசைகளில் உருவமைக்கப்பட்டுள்ளன; இது அழகிய கலைச் சின்னமாகும் .சிற்பக் கலை மற்றும் உள்புற அமைப்புசிலையின் உட்புறம் வெற்றிட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது; இது கட்டுமானத்தின் வலிமையை உறுதிப்படுத்துகிறது. மண்டபத்தின் சுவர்களில் திருக்குறளிலிருந்து ஒவ்வொரு அதிகாரத்திற்கான ஒரு குறள் தமிழிலும், ஆங்கில மொழிபெயர்ப்பும் பொறிக்கப்பட்டுள்ளது.

புவியியல் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம்இந்தச் சிலை, கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் அருகில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறை மீது உள்ளது. இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் இதன் இருப்பிடம் மிகவும் அரிதானது . தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சேவையின் மூலம் இதனைப் பார்வையிடுகின்றனர்.

கலாச்சாரச் சின்னம் திருவள்ளுவர் சிலை வெறும் சிற்பமல்ல; அது தமிழ் நாகரிகத்தின் அறிவு, அறம், அன்பு ஆகிய மூன்றையும் பிரதிபலிக்கும் அமைதியின் சின்னமாகவே திகழ்கிறது. இது தமிழரின் ஒற்றுமையும் பண்பாடும் கலந்த ஒரு நினைவுச்சின்னமாக உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது.

விவேகானந்தர் பாறை
விவேகானந்தர் பாறை

விவேகானந்தர் பாறைக்கு அருகே கடலின் நடுவே உயரமாக நிமிர்ந்திருக்கும் அந்தச் சிலை, தமிழ் நாகரிகத்தின் ஒழுக்க நெறியும் அறிவும் உயர்வையும் வெளிப்படுத்துகிறது. அவரது சிலை எவ்வளவு பெரியதாக இருந்ததோ, அதே அளவுக்கு அவரது நற்குணங்களும் அவருடைய சிந்தனைகளும் வானளாவியது போல உணர்ந்தேன்.

கடலின் அலைகள் அந்தச் சிலையைத் தொட்டு வணங்குவது போல் தோன்றியது . திருவள்ளுவர் சிலையின் அடிவாரத்தில் நின்றபோது, திருக்குறளின் ஆழமான உண்மைகள் மனதில் ஒலித்தன. ‘அறம், பொருள், இன்பம்’ என்ற மூன்று வழிகளின் வாழ்வியல் தத்துவம் இன்றும் காலத்தால் அழியாது நிற்கிறது என்பதை அந்தச் சிலை நினைவூட்டியது. இந்த கன்னியாகுமரி பயணம் என் வாழ்வின் மறக்க முடியாத பக்கமாக நின்றுவிட்டது .

 

—     மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.