அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கீழ்வாலை பாறை ஓவியங்கள்.!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

விழுப்புரம் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் கீழ்வாலை.  விழுப்புரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள இக்கிராமத்திற்கு அருகே தெற்கே அரை கி.மீ. தொலைவில் பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக் குகைகளுமாகச் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் மிச்ச சொச்சங்களைத் தம்மகத்தே பொதிந்து வைத்துள்ளது. கீழ்வாலையில் தொல்பழங்கால மனிதர்களின் கைவண்ணத்தில் உருவான சிவப்பு வண்ணப் பாறை ஓவியங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தன.

கால ஓட்டத்தில் இயற்கை மாற்றங்களாலும், முறையான பாராமரிப்பின்மையாலும் அழிந்து உருக்குலைந்ததுபோக தற்போது  சொற்பமான ஓவியங்களே எஞ்சியிருக்கின்றன.  அதுவும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்தப் பழங்கால ஓவிய பாறைகளை இப்பகுதி மக்கள் ‘இரத்தக் குடைக்கல்’ என்று அழைக்கின்றனர். இரத்தச் சிவப்பு வண்ணத்தில் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளதால் இப்பாறைகளுக்கு இரத்தக் குடைக்கல் என்ற பெயர் வழங்கி அழைக்கலாம்.

பாறை ஓவியங்கள்
பாறை ஓவியங்கள்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கீழ்வாலைக்கு வடபுறத்தில் உள்ள குறுங்காடுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் இரத்தக் குடைக்கல்லுக்கு வந்து படையல் போட்டு விழா நடத்திச் செல்லும் முறைமை கடந்த நூற்றாண்டின் நாற்பதுகள் வரையிலும் வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

“கீழ்வாலை ஓவியப் பாறைகளை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து மக்கள் வாழ்விடமாக இருந்து வந்துள்ளமைக்குச் சான்றாக அப்பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்புப் பானையோடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகளின் பகுதிகளும் கிடைத்துள்ளன. கீழ்வாலைக்கு வடக்கேயுள்ள குறுங்காட்டுப் பகுதியாகிய உடையார் நத்தத்தில் பெருங்கற் காலத்தைச் சேர்ந்த கல்திட்டைகளும் தாய்த்தெய்வ வழிபாட்டின் அடையாளமாக விளங்கும் விசிறிப்பாறையும் உள்ளன என்பதனை இங்கே இணைத்துப் பார்த்தல் வேண்டும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஓவியப் பாறைகளுக்கு அருகே உள்ள வேறுவொரு பாறையில் உரல்போன்ற குழி ஒன்று குடையப் பெற்றுள்ளது. அக்குழியின் அருகில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் 24ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி. 983) கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது.

பாறை ஓவியங்கள் கீழ்வாலையில் பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள பாறைக் குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்களின் வசிப்பிடம் என்று கருதக்கூடிய வகையில் குகை ஒன்று உள்ளது. அந்தக் குகையில் சுமார் முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும். மேலும் அந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்றும் உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

கீழ்வாலை ஓவியத் தொகுப்பில் மனித உருவங்கள் மட்டுமல்லாமல் சூரியன், விண்மீன், வில்அம்பு, சக்கரம், பறவை முதலான உருவங்களும் பலவகைக் குறியீடுகளும் தீட்டப்பட்டுள்ளன.”

பாறை ஓவியங்கள் தமிழகத்தின் மல்லபாடி, கீழ்வாலை, செத்தவரை, புறாக்கல், பாடியேந்தல், ஆலம்பாடி, சிறுமலை, அழகர்மலை, வேட்டைக்காரன் மலை, கொணவக்கரை, கொல்லூர், மசினக்குடி, நெகனூர்ப்பட்டி, கிடாரிப்பட்டி, திருமலை, கருங்காலக்குடி, நாகமலை, திருமயம் முதலான இடங்களில் தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் கிடைக்கின்றன. பாறை ஓவியங்களில் மனிதர்கள், விலங்குகளின் உள் உறுப்புகளை வரைந்து வெளிப்படுத்தும் வகையில் தீட்டப்படும் ஓவியங்கள் உலகின் பல பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இந்த வகையிலான “எக்ஸ்ரே“ ஓவியங்கள் தமிழகத்திலும் ஆலம்பாடி, செத்தவரை போன்ற இடங்களில் கண்டறியப் பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள பாறை ஓவியத் தொகுப்புகளில் சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்த குறியீடுகளோடு பாறை ஓவியங்கள் கிடைக்கும் ஒரே இடம் என்ற பெருமை கீழ்வாலைக்கு உண்டு.!

 

—       ரஞ்சித் ராஜா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.