கெங்குவார்பட்டி – பதவியை ராஜினாமா செய்வதாக தொிவித்த 13 கவுன்சிலர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பதவி நீக்கம் செய்யக்கோரி 15 வார்டு கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் . பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய 13 பேரூராட்சி கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இந்த 15 வார்டு கவுன்சிலர்களும் கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பதவி நீக்கம் செய்யக்கோரி 15 வார்டு கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

வார்டு கவுன்சிலர்கள்
வார்டு கவுன்சிலர்கள்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்யவில்லை என்றால் 13 பேரூராட்சி கவுன்சிலர்களும் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

குறிப்பாக கடந்த 32  மாதங்களாக மன்ற அவசர கூட்டம் மற்றும் மாதாந்திர மன்ற கூட்டம் உரிய சட்ட விதிகளின் படி முறையாக நடத்தவில்லை. கடந்த மார்ச் 2022 முதல் பேரூராட்சி வளர்ச்சி திட்டம் மற்றும் பேரூராட்சி வருவாய் ஈட்டக்கூடிய திட்டங்கள் விவாதிக்கப்படவில்லை.

15 வார்டு குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க குடிநீர் திட்டத்தினை இதுவரை கொண்டுவரப்படவில்லை உள்ளிட்ட 12க்கு மேற்பட்ட திட்ட பணிகளை கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் கொண்டுவரவில்லை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 3.50 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததை மதுரை உயர்நீதி மன்றத்தில் 4 வழக்குகள் தொடுக்கப்பட்டு, அதில் இரண்டு வழக்குகள் தீர்ப்புகள் வழங்கப்பட்டு பேரூராட்சி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை தடுக்க பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் இல்லை என்றால் 13 வார்டு கவுன்சிலர்களும் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர்.

 

—   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.