அன்பின் இறையாட்சியில் குழந்தை உள்ளத்தோடு இணைவோம்…
குழந்தைகள் தினம் : குழந்தைகள் என்பவர்கள் தூய்மை உள்ளம் படைத்தவர்கள். குழந்தைகள் யாதும் அறியாதவர்கள் என்று நாம் குழந்தைகள் தினம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் ஜவர்களால் நேரு குழந்தைகள் பற்றி கூறியது “இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியா. நாம் அவர்களுக்கு கொடுப்பது எந்த வகையிலான கல்வி, எந்த வகையிலான வளர்ச்சி என்றால், நம் நாட்டின் எதிர்காலமும் அதுபோல இருக்கும்.”
நாம் குழந்தைகளிடம் கல்வியை எவ்வளவு எடுத்து செல்கிறோமோ அப்பொழுது தான் அந்த நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும் என்பது உண்மையின் அடிப்படை கருத்து. இயேசு சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடுக்காதீர்கள். இத்தகையோருக்கே இறையாட்சி உரியது என உறுதிப்பட தெரிவிக்கிறார். திருவிவிலியத்தில் குழந்தைகளிடம் நாம் கற்று கொள்ள வேண்டிய குணநலன்கள் : *நம்பிக்கை * தாழ்ச்சி * தூய்மீன்மை இவை மூன்றை நாம் கடைபிடிக்கும் போது நாம் இயேசுவின் அன்பின் இறையாட்சியில் குழந்தை உள்ளத்தோடு இணைவோம்.
இன்றைய குழந்தைகள் தொழில்நுட்பத்தில் திறமையும் அறிவு நுட்பமும் உடையவர்கள். தொழில்நுட்பம் பயன்படுத்துகிற குழந்தைகள் நல்லவற்றை எடுத்து கொண்டு தீயவற்றை தூர போட வேண்டும். இன்றைய குழந்தைகள் தன்னம்பிக்கையோடு பயணித்து வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். இன்றைய காலங்களில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிடுவதில்லை. ஏன் என்றால் பணி காரணமாக. இதனால் குழந்தைகள் தனிமை மற்றும் மனம் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். இன்றைய காலங்களில் கல்வியில் கூட செல்போன் ஆதிக்கம் செலுத்துகிறது. அது தவிர்க்க முடியாதது. ஆனால் செல்போன் பயன்பாட்டை நல்ல அறிவுள்ள விஷயங்களில் மட்டும் பயன்படுத்தும் போது செல்போன் நல்ல செயல்களை ஊக்குவிக்கும் என்பது எனது கருத்தாகும்.
இன்றைய கால சூழலில் பணி, தொழில்நுட்பம், செல்போன் எதுவும் வேண்டாம் என்று ஒரு வார்த்தையில் சொல்லி கொண்டு போக முடியாது. அதில் நல்ல செய்திகளும் உள்ளன. ஏவாளிடம் ஒரு காட்டை கடவுள் கொடுத்து இதில் எல்லா கனிகளும் உண்ணலாம். ஆனால் இந்த ஒரு கனி மட்டும் உண்ண கூடாது. இயேசு சொல்லியும் பேராசை காரணமாக ஏவாள் உண்டார்கள் என்று இறைவசனம் கூறுகிறது. குழந்தைகளே நமக்கும் தொழில்நுட்பம், செல்போனில் ஏராளமான நல்லா செய்திகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் நாம் எவற்றை தேர்ந்தெடுக்க போகிறோம் என்று யோசித்து வாழ்க்கைக்கு தேவையான நல்ல கனியை பெற்று செழிப்படைய கேட்டு கொள்கிறேன்.
— அ.மாணிக்கம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.