திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் உடனடி வேலை உத்திரவாத கடிதம் !
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் & தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஹோப் பவுண்டேசன் இணைந்து 25.07.2025 அன்று திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 35 – க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10th to 12th, I.T.I., Any Degree, Diploma, Engineering & Nursing – துறையை சார்ந்த சுமார் 500 – க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு பொருத்தமான வேலையை தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வேலை நாடுநர்கள் நேர்காணல் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் சுமார் 20-க்கும் மேற்ப்பட்டோருக்கு உடனடி வேலை உத்திரவாத கடிதம் (Offer Letter) வழங்கப்பட்டது.