அடுத்தவேளைச் சோத்துக்கு… வக்கற்றுக் கிடந்தாலும், விட்டுப் போகல… சொந்த சாதிப் பெருமிதம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அடுத்தவேளைச் சோத்துக்கு… வக்கற்றுக் கிடந்தாலும், விட்டுப் போகல… சொந்த சாதிப் பெருமிதம்!

சாதி மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட தற்காக பெற்ற மகளையே, சித்திரவதை செய்து ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் சாதிவெறி பெற்றோர்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக் கோட்டை யடுத்த நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் , சரோஜா தம்பதியினரின் 19 வயது மகளான ஐஸ்வர்யா, பட்டியலின சாதியைச் சேர்ந்த நவீன் என்பவரை காதலித்து கரம் பிடித்தார் என்பதற்காக இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

பெருமாள் - சரோஜா
பெருமாள் – சரோஜா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா, அப்பெண்ணுக்கு ஆபத்து இருக்கிறது என்பதை அறிந்தும் காதல் கணவரிடமிருந்து பிரித்து பெற்றோர்களுடன் அனுப்பி வைத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பெருமாள் சரோஜா தம்பதியினர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

காவல் ஆய்வாளர் முருகையா
காவல் ஆய்வாளர் முருகையா

தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. தமிழுக்கும் தமிழனுக்கும் உலகறியும் படியான ஆயிரம் அடையாளங்கள் இருந்தாலும்; அடுத்தவேளைச் சோற்றுக்கு வக்கற்றுக் கிடந்தாலும் சொந்த சாதிப் பெருமிதத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள் பெருமாள் தம்பதியினர்.

-ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.