அன்பு செய்து வாழும் போது மனிதர் ஆகிறோம் !
”அன்பு செய்து வாழும் போது மனிதர் ஆகிறோம். பிறர் அன்பில் வாழும் போது புனிதர் ஆகிறோம்” என்ற பாடல் வரிகள் நமக்கு கேட்க நன்றாக இருந்தாலும், அதன்வழி வாழ்வது கடினம்தான். இந்த உலகத்தில் மனிதன் கொடுக்கும் அன்பை விட, இயேசுவின் அன்பு பெரியது. அன்பு என்று சிந்திக்கும் போது, நாம் மூன்று வகைகளில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். (1) – தன் அன்பு – தன்னை அன்பு செய்வது. (2) – இறையன்பு – இறைவனை அன்பு செய்வது. (3) பிறரன்பு – ஏழை எளியோரை அன்பு செய்வது ஆகும். இயேசுவும் தன் வாழ்நாளில் அன்பு செய்து வாழ்ந்தார். ( யோவான் 15:12)
 “நான் உங்களை அன்பு செய்ததுபோல, நீங்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும் என்பதே என் கட்டளையாகும்.”   இந்த இறைவசனம் இயேசு தம் சீடர்களை அன்பு செய்து வாழ்ந்து வந்தார் எனவும்; இயேசு தன் வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து வந்த அன்பை பிறரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் இறைவசனம் மூலம் நமக்கு வலியுறுத்துகிறார்.

இன்றைய காலங்களில் அன்பு என்ற வார்த்தை வேறு பேச்சுக்கு அடிமை ஆகி விட்டது. ஆனால், இயேசுவின் அன்பு தன்னையை கையளிக்கும் அன்பாக மாறி உள்ளது. நீங்கள் பிறரிடம் அன்பை மட்டும் எதிர்பாருங்கள் அதுவே உங்களுக்கு எல்லா நலன்களையும் நிறைவாக அளிக்கும். ஏனென்றால், அன்பு என்ற சொல் சிறப்புக்கு உரியது. அன்பு என்ற சொல் அனைத்து வயது வகையினர் மனிதருக்கும் பொதுவான சொல்.

நாம் மூவரிடம் நிச்சயம் அன்பு கூற வேண்டும் (1) – நம்மை படைத்த இறைவனிடம் அன்பு கூற வேண்டும். (2) – உற்றார், உறவினர், நண்பர்கள் (3)- ஏழை எளியோர், ஒடுக்கப்பட்டோர். நாம் இவர்களிடம் அன்பு செய்யும் போது அந்த அன்பின் வழியாக நாம் இயேசுவின் உன்னத அன்பை அனுபவிக்க முடியும் என்பது நிதர்சன உண்மை ஆகும்.
— அ.மாணிக்கம்
 
Comments are closed, but trackbacks and pingbacks are open.