கல்தா கொடுத்த பெருந்தலைகள் ! வளர்த்த கிடா முட்டி சரிந்த டாக்டர் சரவணன் !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கல்தா கொடுத்த பெருந்தலைகள் ! வளர்த்த கிடா முட்டி சரிந்த டாக்டர் சரவணன் ! மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை எதிர்த்து அதிமுக சார்பில் களம் நின்றவர் டாக்டர் சரவணன். விசயமறிந்தவர், எதையும் துணிச்சலோடு பேசக்கூடியவர் என்ற பெயரெடுத்த சு.வெங்கடேசனுக்கு எதிராக “எம்.பி.யை காணவில்லை…கண்டா வரச்சொல்லுங்க…”னு தேர்தலுக்கு முன்பே போஸ்டர் அடிச்சி பரபரப்பை கூட்டியிருந்தனர். அதே போஸ்டருக்கு முன்பாக நின்று ஹாய் சொல்லி போஸ் கொடுத்து எதிர்வினையாற்றியிருந்தார் சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசனுக்கும் டாக்டர் சரவணனுக்கும்தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில், அதிர்ச்சித் திருப்பமாக மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டார் டாக்டர் சரவணன். இரண்டாம் இடத்தில் பாஜக வேட்பாளர் ராமசீனிவாசன் பிடித்துக்கொண்டார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

சு.வெங்கடேசன்.
சு.வெங்கடேசன்.

சென்றமுறை இதே தொகுதியில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் 3 இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளை வாங்கியிருந்தார். இந்தமுறை அதிலிருந்து சுளையாக ஒரு லட்சத்து சொச்சம் வாக்குகள் மிஸ்ஸிங். இம்முறை டாக்டர் சரவணன் வெறும் இரண்டு இலட்சத்து ஐயாயிரம் வாக்குகளை மட்டுமே வாங்கியிருக்கிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

”ரெட்டை விரலை காட்டியே வெற்றி வாகை சூடியவர்கள் எம்.ஜி.யாரும் ஜெயலலிதாவும். இரட்டை இலை சின்னத்தில் யார் ஒருவர் நின்றாலும் வேட்பாளரை பற்றி யோசிக்காமல் சின்னத்தை பார்த்தே ஓட்டுப்போட்டு பழகியவர்கள் அதிமுகவினர். அந்தக் கட்டுக்கோப்பு எல்லாம் காலம் கடந்ததாகிவிட்டது.

மதுரையில் அதிமுக தலைகளுக்கா பஞ்சம்? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா என்று பெரும் பட்டாளமே இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? பெருந்தலைகளெல்லாம், நானும் இருக்கிறேன் என்று வெறுமனே தலையை காட்டிவிட்டு களப்பணி ஆற்றாமல் சென்றதே தோல்விக்கான காரணம்.” என்பதாக புலம்பித் தீர்க்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இதெல்லாம்விட, பாஜகவை மதுரையில் வளர்த்துவிட்டதே டாக்டர் சரவணன்தானாம். அவர் வளர்த்த கெடாவே தற்போது நெஞ்சில் குத்தியதாய் சோக கீதம் வாசிக்கின்றனர் டாக்டரின் ஆதரவாளர்கள்.

– ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. Ramki says

    கொள்கை என்பதே இல்லாத கோமாளிகள் திராவிட கட்சிகளை நடத்தினால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் கிறுக்கர்கள் கம்யூனிச கட்சியை வளர்ப்பார்கள்
    தமிழ்நாடும் குடிச்சவராகும்

Leave A Reply

Your email address will not be published.