அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இளைஞர்களிடையே பக்தி குறைந்துவிட்டதால்தான் பருவம் தவறி மழை பொழிகிறது – சொல்கிறார் மதுரை ஆதீனம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவுருவ சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார்.

Madurai Atheenam அப்போது, ”இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மதுரை ஆதினம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு, இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். ” என்று ஒரே போடாக போட்டுவிட்டு பத்திரிகையாளர்களின் அடுத்த கேள்விக்கு பதில் சொல்லாமலே நகர்ந்து சென்றார், மதுரை ஆதினம்.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.