அங்குசம் சேனலில் இணைய

நீ இந்த ஜாதினு தெரிஞ்சிருந்தா ஆர்டர் கொடுத்திருக்க மாட்டேன் … கேட்டரிங் காரரை மிரட்டிய திமுக பிரமுகர் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

”நீ பட்டியலின ஜாதியா டா உனக்கு பணம் தர மாட்டேன். உன்னை நம்பி தெரியாமல், அன்னதான ஆர்டர் கொடுத்து விட்டேன்” என சாதி ரீதியாக இழிவுபடுத்தியதோடு காலில் விழுந்து கெஞ்சியும் பணம் கொடுக்காமல், மதுரை மாநகர திமுக அவைத்தலைவர் மிரட்டுவதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பட்டியிலன தம்பதியினரால் பரபரப்பானது.

”எங்கள மாதிரி கஷ்டபடுற பட்டியலினத்தினரை திமுக காரங்க ரொம்ப கொடுமை படுத்துறாங்க. ஸ்டாலின் ஐயா நடவடிக்கை எடுங்க ஸ்டேஷனில் சொன்னதுக்கு எங்களை வந்து மிரட்டினார்கள்.  எங்கள ஆள வச்சு ஏதாவது பண்ணிருவாங்களோனு பயமா இருக்கு. வீட்டுக்குப் போகும்போது உசுரு இருக்குமா? என தெரியவில்லை “ என்று அச்சத்துடன் தம்பதியினர் பேசிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கார்த்திக்
கார்த்திக்

போலிஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்க போனா, ”இவன் பெரிய கொலை கேசுக்காரன். இவன் மேல 1008 கேஸ் இருக்கு. உன்ன கொன்றுவாங்க போடா” என என்னை காவல்துறையினரே மிரட்டி அனுப்புறாங்க” என கேட்டரிங் உரிமையாளர் வேதனையோடு பேட்டியளித்திருக்கிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மதுரை மாநகர் எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நவசுருதி கேட்டரிங் சர்வீஸ் சென்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் மதுரை கரிமேடு பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதாகக் கூறி, மதுரை மாநகர திமுக அவைத்தலைவரான ஒச்சு பாலு என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்டரிங் பணிகளை செய்து தருமாறு கூறியுள்ளார்.

கேட்டரிங் காரரை மிரட்டிய திமுக பிரமுகர் !இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென 12-ஆம் தேதி மாலை கார்த்திகை தொடர்பு கொண்டு, திமுக அவைத்தலைவர் ஒச்சு பாலு காய்கறிகளையும் சேர்த்து வாங்கித் தருமாறு கூறியுள்ளார். இதனை நம்பி கார்த்திக் சமையல் செய்வதற்கான காய்கறிகள், தண்ணீர் உள்ளிட்டவைகளை வாங்கி பயன்படுத்தி சமையல் செய்து கொடுத்துள்ளார். கோவில் அன்னதானம் 10 ஆயிரம் பேருக்கு வழங்குவதாக நோட்டீஸ் அடிக்கப்பட்ட நிலையில், அன்னதான நிகழ்ச்சியை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி தொடங்கி வைத்துள்ளார்

இதனையடுத்து முதல் பந்தி பரிமாறும் போது, சாம்பாரில் உப்பு இல்லை என கூறியதையடுத்து உடனடியாக உப்பு போட்டு மீண்டும் அன்னதானம் பரிமாறப்பட்டுள்ளது. இதையடுத்து 13- ஆம் தேதி மாலை அன்னதானம் முடிவடைந்த நிலையில், கேட்டரிங் உரிமையாளர்  கார்த்திக், ஒச்சு பாலுவிடம் அன்னதானத்திற்கு உணவு தயாரித்ததற்கான பணத்தை கொடுக்குமாறும் தன்னிடம் பணியாற்றிய 55 பேருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அப்போது ”சாம்பாரில் உப்பு இல்லை பணமெல்லாம் தர முடியாது” என ஒச்சு பாலு கார்த்திக்கிடம் கூறியதாகவும்; அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒச்சு பாலு தன்னை சாதிய ரீதியாக பேசி உனது சாதி தெரிந்து இருந்தால் நான் ஆர்டர் கொடுத்திருக்க மாட்டேன் என இழிவுபடுத்தி பேசியதாகவும்; மீண்டும் அவரிடம் பணம் கேட்பதற்காக சென்றபோது, உன் மீது திருட்டு பழி கட்டி ஸ்டேஷனில் அடைத்து விடுவேன் என மிரட்டுகிறார் எனது மனைவி காலில் விழுந்து கெஞ்சியும் கூட என்ன நடிக்கிறாயா? என கேட்டு சாதிய ரீதியாக பேசி எங்களை மிரட்டல் விடுக்கிறார் ” என பகீர் புகார் தெரிவிக்கிறார் கார்த்திக்.

இது குறித்து கரிமேடு காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் அளிக்க சென்றபோது, அங்குள்ள காவல் துறையினர் ஒச்சு பாலு மோசமான நபர். அதனால் நீங்கள் புகார் அளிக்க வேண்டாம் என அனுப்பிவைத்து விட்டனர்.

ஒச்சு பாலு
ஒச்சு பாலு

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதனால், தனது கேட்டரிங்கில் பணிபுரிந்த 55 பணியாளர்களுக்கான ஊதியத்தை 3 நாட்களாக வழங்காத நிலையில், அவர்கள் தினசரி வீட்டிற்கு வந்து ஊதியம் கேட்கிறார்கள். இதனால் எங்களுக்கு அசிங்கமாக உள்ளது. அவரை சந்தித்து பணம் கேட்டால், எங்களை கட்டிப் போட்டு விடுவோம் என மிரட்டுகிறார். சாதிய ரீதியாக இழிவுபடுத்தி பேசுகிறார்.

எனவே, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று சாதிய ரீதியாக பேசி எங்களை இழிவுபடுத்தி திமுக நிர்வாகி ஒச்சுபாலு  மீது மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் தனது ஊதியம் கூட வேண்டாம். ஆனால், கேட்டரிங்கில் வேலை பார்த்த 55 நபர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

எனவே, எனது பாக்கி தொகையான ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ரூபாயை உடனடியாக திமுக நிர்வாகி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குஉரிமையாளர் கார்த்திக் மற்றும் அவரது மனைவி மற்றும் பணியாளர்கள் கண்ணீர் மல்க வருகை தந்து தங்களது குற்றச்சாட்டை வைத்தனர்.

இதுகுறித்து பேசிய கார்த்திக் …

”10ஆயிரம் பேருக்கு அன்னதானத்திற்கு திமுக அவைத்தலைவர் ஒச்சுபாலு ஆர்டர் கொடுத்தார். சமைத்துக் கொடுத்து சிறப்பாக செய்து முடித்த பின்பு மாலையில் பணம் கேட்டபோது நீ இந்த ஜாதியா நீ போடா என பேசினார். எங்க அம்மாவை மரியாதை இல்லாமல் பேசி என்னை தாழ்த்தி பேசியும், என்னுடன் வேலைக்கு வந்த 55 பேரையும் தரைக்குறைவாக பேசி வெளியில் போடா, அடிப்போம்” என கூறினார் .

எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு 4-ஆவது நாளாக அலைகிறோம். பணம் தராமல் அசிங்கப்படுத்தி கேவலப்படுத்துகிறார்கள். நீ பணம் கேட்டு வந்தால், உன் மீது திருட்டுப் பட்டம் கட்டி உன்னை தூக்கி உள்ள வைப்போம் என மிரட்டுகிறார்கள்.

நான் இரண்டு  பிள்ளைகளை வைத்துள்ளேன்.  அத்தனை பேருக்கு பதில் சொல்ல முடியவில்லை. காய்கறி வாங்கியவர்களுக்கு, 55  பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. என் சம்பளம் கூட எனக்கு வேண்டாம். என்னை நம்பி வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வந்தால் போதும்.

சாம்பார்ல உப்பு கம்மியா இருக்குன்னு சொல்லி ஒரு குத்தமா? அதனால காசு தர மாட்டேன்னு சொல்றது நியாயமா? சாதியை பார்த்தா நீங்க சோறு சாப்பிடுறீங்க?” என கேள்வி எழுப்பினார்.

கார்த்திக்கின் மனைவி பேசியபோது … “50 பேருக்கு பதில் சொல்ல முடியல எங்கள நம்பி தான் வேலைக்கு வந்தார்கள். ஒச்சுபாலு காலில் கூட விழுந்தேன். அதை கூட நடிக்கிற என கேட்கிறார். நாங்க என்ன தப்பு செய்தோம்? ஏன் ஏழை வயிற்றில் இப்படி அடிக்கிறார்? கட்சியை வைத்து மிரட்டுகிறார்? எங்களை ஏதாவது பண்ணிருவாங்கன்னு பயமா இருக்கு. ” என்கிறார்.

 

 —     ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.