முவேந்தர் புலிப்படை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம், கவின் படுகொலையில்சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் ஆணவப் படுகொலைக்கு சிறப்பு சட்டம் மத்திய, மாநில அரசுகள் இயற்ற வலியுறுத்தியும் மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பு மூவேந்தர் புலிப்படை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பாஸ்கர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர் எஸ்டிபிஐ கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்பு உள்ள ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் மற்றும் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்