20 அடியை 40 அடியாக மாற்ற கோரிக்கை ! செவிசாய்க்காத மத்திய அரசு !
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு திருமங்கலம் ASP அன்சுல் நாகர் தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் ஊரட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதகமாக நடைபெற்ற வருகிறது. ரூபாய் 38 கோடியே 23 லட்சம் மதிப்பில் பாலத்திற்கு கீழ் புதிதாக போடப்படும் 20 அடி சாலையை கூடுதலாக மேலும் 20 அடியாக மொத்தம் 40 அடி சாலையாக அகலப்படுத்த கோரி வளையங்குளம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சாலையை அகலப்படுத்த வளையங்குளம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசின் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை செவி சாய்க்கவில்லை.

ஆகையால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் இப்பகுதியில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளனர். வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தற்போது சாலை மறியல் சிக்கி தவித்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் .
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.