அங்குசம் சேனலில் இணைய

குவாரியில் வெடிக்கும் ராட்சத பட்டாசு! அச்சத்தில் பொதுமக்கள்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சராயன்பட்டி புதூரில் கிரசர்குவாரி உள்ளது. இந்த கிரசர் குவாரி கழிவுகற்களால் குடிநீர்குழாய் உடைக்கப்பட்டு அடிக்கடி குடிநீர் தடைபடுவதாக கூறி குவாரியை உடனடியாக மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

பொதுமக்கள் கோரிக்கைஇந்த கிரசர் குவாரியால், ராட்சத பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். இதனால் நில அதிர்வு ஏற்பட்டு வீடுகள் அனைத்தும் விரிசல், அதிர்வலைகள் காணப்படுகின்றன. மேலும், பள்ளி வேன்களில் குழந்தைகளை ஏற்றி செல்ல அச்சப்பட்டு செல்கின்றனர். கிரசர் குவாரி கழிவு கற்களால் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு அடிக்கடி குடிநீர் தடைபட்டது. இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மனுவாக அளித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் சத்யா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

மேலூர் கச்சராயன்பட்டி புதூரில் கிரசர்கல்குவாரி 50 வருடமாக செயல்பட்டு வருகிறது. முன் காலத்தில் கல்குவாரி உள்ள கற்களை கைகளால் உடைத்து வந்தனர். தற்போது வெடிகள் வைத்து கற்களை உடைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மாசு ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் வாழும் வயது முதிர்ந்தவர்கள் உடல்நிலை முடியாத நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாக செல்லும் நிலையில், வெடிவைத்து இருந்தால் அது வெடித்து முடித்த பின்னரே கடந்து செல்லும் நிலை காணப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கைஇது வெடிக்க சுமார் அரை மணி நேரம் ஆகும். இரவு நேரங்களில் வெடிப்பதால் அதிக சத்தம் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் தூக்கம் இல்லாத நிலை காணப்பட்டு வருகிறது. சுடுகாடு பகுதிகளை கிரசர் கற்களை கொட்டி வைத்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வருகின்றனர். வெளியூரில் இருந்து வந்து பணி புரியும் நபர்கள் மது அருந்தி பெண்களை மிரட்டி வருகிறார்கள். இதை தட்டி கேட்ட ஒருவரை அடித்து உள்ளனர். வெளியே இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வருகிறார்கள்.

இந்த குவாரியால் தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மேலூர் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இந்த குவாரி லைசன்ஸை அரசு ரத்து செய்ய வேண்டும். அதிகமான ஆழம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குவாரியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆளுங் கட்சியினர் நான்கு நபர்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

  —   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.