கட்டிட கலையில் சிறந்த மதுரை திருமலை நாயக்கர் மகால் !
மதுரையின் அடையாளங்களில் ஒன்று திருமலை நாயக்கர் மகால். திருமலை நாயக்க மன்னரால் கி.பி 1623 முதல் 1659 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. இது அந்த காலத்தின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் விதமாக இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

திருமலை நாயக்கர் மகாலை நினைவுச் சின்னமாக கடந்த 1971 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதேபோல 1981 ஆம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சி கருத்தில் கொண்டு ஒலி, ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றளவும் திருமலை நாயக்கர் மன்னரின் வரலாறு குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருமலை நாயக்கர் மகாலுக்குள் செல்வதற்கு நுழைவுக் கட்டணமாக ஒருவருக்கு 10 ரூபாய், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் உலக மரபு (world Heritage Day) நாள் ஏப்ரல் 18-ஆம் தேதி அணுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ஒரு வார காலத்திற்கு நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றிப் பார்க்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.