யார் இந்த முசிறி அதிமுக வேட்பாளர் என்.யோகநாதன் ?
திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் என்.யோகநாதன்
பெயர் : என்.யோகநாதன்
சொந்த ஊர் : எம்.கருப்பம்பட்டி, மேட்டுப்பாளையம் பேரூராட்சி. முசிறி தாலுகா, திருச்சி மாவட்டம்
பிறந்ததேதி : 26.06.1969 / வயது-56
ஜாதி : முத்தரையர்
மனைவி : Dr.ஜான்சிராணி MBBS. மருத்துவ அலுவலர், ஆரம்ப சுகாதார நிலையம் மேட்டுப்பாளையம்.
மகள்கள் : Dr.பிரியதர்ஷினிMBBS, Dr.ஜெயகமலி M.S., (மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது)
மகன் : Y.வாஞ்சிநாதன் B.A., (டெல்லி). இன்னும் திருமணம் ஆகவில்லை.
தற்போதைய கட்சி பதவி: திருச்சி வடக்கு மாவட்ட MGR இளைஞரணி இணைச் செயலாளர்
ஏற்கனவே வகித்த பதவி : தா.பேட்டை ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி 10 ஆண்டுகள், தா.பேட்டை ஒன்றிய கழக துணைச்செயலாளர் 10 ஆண்டுகள்.
உள்ளாட்சி பதவிகள் :
கடந்த 2006 முதல் 2016 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர்.
2013 முதல் 2022வரை தொடர்ந்து எம்.கருப்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர். இவர் கடந்த 1996 முதல் நடந்த அனைத்து உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
கட்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது : கடந்த 2000-ம் ஆண்டு டான்சி நில வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பிறந்து 24 நாட்களே ஆன தனது இளைய மகள் ஜெயகமலி மற்றும் மனைவி குடும்பத்துடன் கலந்து கொண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். கட்சி அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
தொழில் : விவசாயம், ரியல்எஸ்டேட், ஹோட்டல்








Comments are closed, but trackbacks and pingbacks are open.