மதுரை மாரியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழா ! மனம் உருக வணங்கிய  பக்தர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உபகோவிலான தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழா மற்றும் பங்குனி பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், நிகழ்வின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து மின்னொளி அலங்காரத்தில் புறப்பாடாகி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் அம்மன் சன்னதி வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதுரை மாரியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழா தொடர்ந்து அம்மனுக்காக வரவழைக்கப்பட்டிருந்த  50-க்கும் மேற்பட்ட கூடைகளிலே பல வண்ண மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தோடு அம்மனை குளிர்விக்கும் பூச்சொரிதல்   நிகழ்வு நடைபெற்றது. கைலாய வாத்தியங்கள் முழங்க மேளதாளங்களோடு அம்மனை மனம் உருக பக்தர்கள் வணங்கினர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இந்த நிகழ்வில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அம்மனுக்கு பல வண்ண மலர்களை வழங்கக்கூடிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தனது குடும்பத்தினரோடு கலந்துகொண்டு  சுவாமி தரிசனம் செய்தார். மேலும், தெப்பக்குளம் மாரியம்மன் இன்று மாலை புறப்பாடாகி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்து, இரவு தங்கி மறுநாள் பதினெட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, கொடி பட்டம் பெற்ற பிறகு நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி முனிச்சாலை வழியாக தெப்பக்குளம் சென்றடையும்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அதனைத் தொடர்ந்து 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. பதினெட்டாம் தேதி இரவு 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கக்கூடிய கோவில் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

மதுரை மாரியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு நாளிலும் அம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உபகோவிலான தெப்பக்குளம் மாரியம்மன் மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாளித்தது குறிப்பிடத்தக்கது.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.