கீழக்கரை – போதுமான மருத்துவர்கள் நியமிக்க வேண்டி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேண்டேஜ் கட்டி ஆர்ப்பாட்டம்.
கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் பணியாளா்கள் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேண்டேஜ் கட்டி ஆர்ப்பாட்டம்.
ராமநாதபுரம் கமாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேன்டேஜ் கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குருவேல் ராஜ்குமார் .மகாலிங்கம். உடையாள். தாலுகா செயலாளர் முருகேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் முனியாண்டி பாலு கருப்பசாமி, ஷியாம் சுந்தர், சாந்தி கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் மகாலிங்கம் பேசும்போது இங்கு எட்டு மருத்துவர்கள் பணிபுரிந்தனர் தற்சமயம் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள் அதுவும் பெண் மருத்துவர்கள் மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் மட்டும்.
மேலும் தற்சமயம் டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கிழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாதது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கி வருகிறது.
அது மட்டும் இல்லாமல் யாரேனும் விபத்து ஏற்பட்டு மருத்துவமனை சென்றாள் மருத்துவமனையில் உள்ள டாக்டர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு விடுகிறது உடனடியாக அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி விடுகிறார்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றால் அங்கிருந்து மதுரைக்கு கூட்டிச் சென்று விடுங்கள் என்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதும் சுடுகாட்டுக்கு கூட்டி செல்வதும் ஒன்றுதான் இவ்வளவு மோசமாக அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. நோயாளிகள் தான் கவலைக்கிடமான சூழ்நிலைகளில் மருத்துவமனை செல்வார்கள் ஆனால் தற்சமயம் அரசு மருத்துவமனையே கவலைக்கிடமாக உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் அவர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு போதுமான அளவில் மருத்துவர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.