மதிமுக மா.செ. அதிரடியாக நீக்கிய வைகோ ! 28 மாவட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல் ! திக் திக் மதிமுக !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மயிலாடுதுறை மதிமுக மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி கட்சியிலிருந்து நீக்கம் – வைகோ அறிவிப்பு 28 மாவட்ட மதிமுக பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல்  –  நெருக்கடியிலிருந்து மீளுமா மதிமுக

கடந்த 30 ஆண்டு காலம் மதிமுகவில் வைகோவோடு பயணம் செய்தவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சார்ந்த இ.மார்கோனி. இவர் கட்சியில் மாநில இளைஞர் அணி போன்ற பல்வேறு பொறுப்புகளிலிருந்தவர். மயிலாடுதுறை மாவட்டம் தனியாக உருவான நிலையில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக வைகோ அவர்களால் நியமனம் செய்யப்பட்டார். வைகோ மட்டுமின்றித் துரைவைகோ அவர்களுடனும் நெருக்கமாக இருந்தவர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கடந்த ஜூலை 4ஆம் தேதி நாளிதழ்களில்.“மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்” என்று வைகோ அறிவித்திருந்தார். இந்த அதிரடி அறிவிப்பால் மார்கோனி ஆதரவாளர்கள் தரப்பில் வைகோவின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துச் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘ஒரு மாவட்டச் செயலாளர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டார்’ என்றால் அது குறித்து அவரிடம் கட்சித் தலைமை விளக்கம் கேட்டதா? விளக்கம் கேட்கப்படாமல் கட்சியிலிருந்து நீக்குவது என்பது கடைந்தெடுத்த சர்வாதிகாரம்” என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மதிமுக மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி
மதிமுக மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதிமுக கட்சியில் தற்போது என்னதான் நடக்கின்றது என்று மாவட்டப் பொறுப்பாளர்களில் ஒருவர் அங்குசம் செய்தி இதழிடம் பேசும்போது,“கடந்த 30 ஆண்டு காலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மார்கோனி நன்றாகவே செயல்பட்டு வந்தார். அதன் அடிப்படையில்தான் அவர் மாவட்டச் செயலாளர் என்ற தகுதிக்கு உயர்ந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மார்கோனி தன் தாயாரைச் சீர்காழி நகரமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நிற்கவைத்து வெற்றிபெறச் செய்தார். தொடர்ந்து சீர்காழி நகரமன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தலைவர் பதவியைத் தன் தாயாருக்கு வழங்கவேண்டும் என்று திமுகவுக்கு நெருக்கடி தந்தார்.

மேற்கண்ட பிரச்சனையில் துரைவைகோவே தலையிட்டுத் திமுக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது திமுக தரப்பில், மார்கோனி தாயாருக்கு நகரமன்றத் தலைவர் பதவியை ஒதுக்கமுடியாது. மார்கோனி தன் சொந்தச் செலவில் திமுக வேட்பாளரைத் தோற்கடித்துச் சுயேட்சை வேட்பாளர்களை வெற்றிபெற வைத்துள்ளார்” என்று பதில் கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மார்கோனி வைகோவையும், துரைவைகோவையும்  மதிக்கவில்லை என்கிற செய்தி வைகோவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

 

சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழா மார்கோனி
சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழா மார்கோனி

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அண்மையில் சீர்காழியில் நடைபெற்ற சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழா செலவுகளை மார்கோனி ஏற்றுச் பிரமாண்டமாக   செலவு செய்துள்ளார். பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, கிலோகணக்கில்  பூக்கள் கோயில் மீது பொழியப்பட்டது. இதனால் மார்கோனி தருமபுர ஆதினத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். தருமபுர ஆதினத்தின் பல்லாக்கு பவனியைத் திராவிட இயக்கங்கள் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருந்த நிலையில் மார்கோனி ஆதினத்தோடு இணக்கமாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் பூம்புகார் அதிமுக . புள்ளிகளை சந்தித்து  வருவதாகவும் அதிமுக வட்டாரத்திலிருந்து கசியவிடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில்  மார்கோனி எந்தக் கட்சிக்கும் செல்வார் என்ற நிலையில் தான் பொதுச்செயலாளர் வைகோ மார்கோனியைக் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து மார்கோனி ஆதரவாளர்கள் 28 பேர் மதிமுக மாவட்டப் பொறுப்புகளிலிருந்து விலகினர். இதில் 4 பேர் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் எனப் பலர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். மார்கோனி ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து அங்குசம் இதழைத் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர்,“மார்கோனி கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்தார் என்றால், அவருக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பவேண்டும் அல்லவா? அதை வைகோ செய்துள்ளாரா? இப்போதும் கேட்கிறோம், மார்கோனி கட்சிக் கட்டுப்பாட்டை எப்படி மீறினார் என்பதை வைகோ அறிக்கை மூலம் தெளிவுபடுத்தவேண்டும். துரைவைகோவின் ஆதரவாளர்களால் மார்கோனியைப் பிடிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நாங்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளோம்” என்று கூறினர்.

மதிமுக மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி
மதிமுக மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி

இந்தக் குழப்பங்களுக்கு நடுவே, மயிலாடுதுறை மாவட்ட மதிமுக அவைத்தலைவர் டி.பன்னீர்செல்வம் தலைமையில் குத்தாலத்தில் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மதிமுக துணைப்பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் பேசும்போது,“மதிமுக என்பது வைகோவின் தொண்டர்களால் நடத்தப்படுகின்றன கட்சி. வைகோவுக்குத் துரோகம் செய்பவர்களுக்கு இக் கட்சியில் இடமில்லை. விரைவில் மயிலாடுதுறை மாவட்டத்திற்குப் புதிய மாவட்டச் செயலாளரை வைகோ விரைவில் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட மதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை வைகோ விரைந்து தீர்க்கவேண்டும் என்று மதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். நடக்குமா? என்பது வைகோ கையில்தான் உள்ளது.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.