வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் – 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் – 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்
நமக்கு ஒரு கேள்வி வரும் வள்ளலார் சாமியார்தானே, வள்ளலார் சாமியாரே கிடையாது. ஒரு சாமியாருக்கு என்ன இலக்கணம் என்றால் ஒரு சாமியார் காவி அணிந்திருப்பார். நான் சங்கல்பம் செய்து கொள்கிறேன் என்பதற்கான அடையாளமாகப் பூணப்படுகிற ஆடைதானே தவிர அது தொடர்பிற்கான அடையாளம் இல்லை. அவரிடம் மணிமாலைகள் அணிந்தவர் இல்லை.
நீங்கள் சாதாரணமாகச் சாமியார் என்றால் இப்படித்தான் நடப்பார்கள். ஆசீர்வாதம் செய்து கொண்டேதான் நடப்பார்கள். ஆனால் வள்ளலார் கையைக் கட்டி கொண்டேதான் நடப்பார். கையை வீசி நடக்க மாட்டார். “உங்களுடைய உடம்பில் ஒன்பது துளைகளைப் போட்டு அனுப்பிய கடவுள் அதிகமான துளைகள் வேண்டும் என்றால் அதையும் அவனே போட்டு அனுப்பி இருக்கமாட்டானா நீங்கள் ஏன் தனியாகக் காது குத்திக் கொள்ளவேண்டும்?” என்று வள்ளலார் கேள்வி கேட்கிறார்.
எந்தச் சாமியாராவது கேள்வி கேளுங்கன்னு அப்படின்னு சொல்கிறார்களா? வள்ளலார் நீளமாக முடி வளர்த்திருந்த துறவி அவர், முக்காடு போட்டு இருப்பதனால் அவர் வைத்திருக்கிற முடி நமக்குத் தெரியவில்லை. அவர் மொட்டை தலைக் கிடையாது. தாடி வைத்திருந்தவரும் கிடையாது. அவருக்கு உடமை கிடையாது. சாமியார்கள் சொத்து சேர்க்கிறார்கள், மடம் வைத்துக்கொள்கிறார்கள், ஆசிரமம் வைத்துக் கொள்கிறார்கள். வள்ளலார் இவற்றையெல்லாம் வைத்திருந்தாரா என்றால் இல்லை. வேதம், ஆகமம் இவற்றையெல்லாம் போற்றினாரா என்றால் இல்லை.
வள்ளலார் மதங்களின் மீது மாறாத பற்று வைத்திருந்தாரா? என்றால் இல்லை. தன்னைச் சாமி என்று அழைக்கக்கூடாது என்று கண்டிக்கின்றார். சாமி என்பது ஆடம்பரத்திற்கு ஆரவாரத்திற்கு அடுத்த பெயர் சாமின்னு சொல்லாதே என்று கூறியுள்ளார். அவருடைய பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டபோது, அவருடைய மாணவர் தொழுதூர் வேலாயுதம் முதலியார் அதில் ஆக்கியவர் பெயர் என்கிற இடத்தில் திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற சிதம்பரம் ராமலிங்கம்பிள்ளை என்று அச்சடித்து விட்டார். புத்தகம் தயார் செய்யப்பட்டுவிட்டது.
வள்ளலார் கோபித்துக்கொள்கிறார், “திருவருட்பிரகாச வள்ளலார் என்று எப்படி நீ பெயர்போட்டு அடிக்கலாம். அந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தது யார்?” என்று கோபித்துக் கொள்கிறார். புத்தகங்கள் வந்துவிட்டன. திருவருட்பிரகாச வள்ளலார் யார்? சிதம்பரம் ராமலிங்கம் அப்படி வைத்துக் கொள்வோம். சிதம்பரம் ராமலிங்கம் என்றுதான் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். ஆனால், இப்போது நம்முடைய சமகாலத்தில் ஒரு சாமியார் இருக்கிறார். நான்தான் பரமசிவன். கைலாசத்தில் உங்கள் எல்லாருக்கும் இடம் கொடுக்கிறேன். பாஸ்போர்ட் விசாவும் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொல்லுகிறார்.
அவர் சாமியார். இவர் சாமியாரா? நம்முடைய எல்லாச் சாமியார்களும் சாமியாராக உடன் தன்னுடைய பூர்வாசிரமம் பெயரை நீர்த்துவிடுவது, தன்னுடைய இயற்பெயரைத் தனக்கு இடப்பட்ட பெயரை நீக்கிவிட்டு ஆனந்தா என்று ஒரு புதிய பெயர் ஒன்றை வைத்துக் கொள்வார்கள். வள்ளலார் காலமாகும்போதும் அவருடைய பெயர் ராமலிங்கம்தான். அவர் பெயரை நீக்கவே இல்லை. தன்னுடைய தந்தையின் பெயரை நீக்கிவிடுங்கள் என்கிறார். அவருடைய அப்பா பெயர் இராமையா.
இரா.இராமலிங்கம்பிள்ளை என்றுதான் அவர் எழுதியிருக்க வேண்டும். தந்தை என்பவன் உபசாரத்தால் தந்தை. அவனிடம் இருந்து வந்த ஒரு துளி விந்து என்னை உற்பத்தி செய்தது. தாய் என்பவள் உபசாரத்தினால் தாய். அவளிடம் திரண்ட ஒரு கருமுட்டை என்னை உருவாக்கியது அவ்வளவுதான். அவர்களுடைய வேலை முடிந்து போய் ஏன் தந்தையும் தாயையும் துறக்கிறான். ஏனென்றால் தந்தை, தாயின் வழியாகத்தான் பரம்பரை வருகிறது, பாரம்பரியம் வருகிறது.