கோலாலம்பூரில் மாஷா பல்கலைகழத்துடன் மதுரை அமெரிக்கன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் !
கோலாலம்பூரில் மாஷா பல்கலைகழத்துடன் மதுரை அமெரிக்கன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மாஷா பல்கலைகழகத்துடன்மதுரை அமெரிக்கன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டு அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நிகழ்ச்சி 21.05.2024 கோலாலம்பூரில் உள்ள மாஷா பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாஷா பல்கலைகழகத்தின் இணை துணைவேந்தர் முனைவர்ரோஸ்னா பின்ட்டி முகமத் செய்ன் முன்னிலையில் உயிர் அறிவியல் துறைப்பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் தவமணி கிறிஸ்டோபர் கையெழுத்திட்டனர்.
அமெரிக்கன் கல்லூரி சார்பாக கல்லூரியின் நிதிக்காப்பாளர் முனைவர்பியூலா ரூபி கமலம், டீன் முனைவர் லூர்து இமாகுலேட், துறைத்தலைவர்கள் முனைவர் ஏ.ஜோசப் ததேயுஸ் மற்றும் முனைவர் ஆண்ட்ரூ பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம்மூலம் அமெரிக்கன் கல்லூரி மற்றும் மாஷா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி பரிமாற்றம் மூலம் பயன் பெறுவர்குறிப்பாக, உயிர் அறிவியல்
துறையைச் சார்ந்த இருதரப்பு ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களின் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
-ஷாகுல்
படங்கள் – ஆனந்த்