வ.உ.சிதம்பரனார் 89ஆம் ஆண்டு நினைவு தினம்! மரியாதை செய்த காங்கிரஸ் கமிட்டி!
சாத்தூர்: இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் அவர்களின் 89ஆம் ஆண்டு நினைவு தினம், சாத்தூர் முக்குராந்தகல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்விற்கு சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சாத்தூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ், தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள், வ.உ.சி அவர்கள் இந்திய விடுதலைக்காக அனுபவித்த 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும், அவரின் தியாகத்தையும் நினைவுகூர்ந்து கோசமிட்டு மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார பொறுப்பாளர் சன். மாரிமுத்து, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், துணைத் தலைவர்கள் ஆறுமுகம் வெள்ளைச்சாமி, சின்னப்பன், சங்கரநத்தம், வழக்கறிஞர் மகேஸ்வரன், சுந்தர்ராஜன், சத்திரப்பட்டி லட்சுமணன், பூமிநாதன், சிந்தபள்ளி வீரப்பன், சுப்பையா, சடையம்பட்டி மாரிமுத்து, நகரச் செயலாளர் ரவி, வழக்கறிஞர் மகேஸ்வரன், சங்கர் பாண்டியன், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ், படந்தால் மணிகண்டன், மேட்டுப்பட்டி மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.