அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அப்பா, அம்மாவிடம் திரும்பி போக கூடாது ! விரட்டிய நினைவுகள், வென்ற உறுதி !

2

திருச்சியில் அடகு நகையை விற்க

என் அப்பா, அம்மா விடம் திரும்பி போக கூடாது என்கிற வைராக்கியம் தான் இந்த நிமிடம் வரை என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

அம்மா, அப்பா என்றாலே நல்லவர்கள் என்பது இல்லை. என் பெற்றோரால் எனக்கு அவமானங்களும், மனத்துயரங்களும் மட்டுமே கிடைத்தன. ஒரு ஆண் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஆணாதிக்கத் திமிர் கொண்ட அப்பா, அதனாலேயே மனைவி என்னும் ஸ்தானத்தை தக்க வைத்துக் கொள்ள தாய் என்னும் ஸ்தானத்தை மறந்தே போன அம்மா….

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஆண் குழந்தை தான் கௌரவம் என்ற எண்ணம் கொண்ட அப்பாவிடம் தினமும் பெல்ட் அடி வாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். நீ எங்க போனாலும் என்கிட்ட தான் திரும்பி வரணும் என என் முகத்தில் உமிழ்ந்து என் அப்பா சொன்ன போது எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களிடம் திரும்பி செல்லக் கூடாது என எடுத்த முடிவில் , இன்று வரை தோற்கவில்லை.

திருச்சி ரோஷன் மஹாலில் ஜெயா டிவி பட்டிமன்றத்தில் காதல் திருமணம் என்ற அணியில் பேச அழைத்தார்கள். அப்போது எனக்கு இருபது வயது. ரோஷன் மஹாலில் அத்தனை பேர் முன்னாலும் என்னை அடித்து, பேச விடாமல் இழுத்துக் கொண்டு போனார். சுமதியை பட்டிமன்றம் பேச கூப்பிட்டால் அவங்க அப்பா பிரச்சினை பண்ணுவார் என மற்ற நடுவர்கள் வாய்ப்பு தரவில்லை. அதை மாற்றவே பல வருடம் போராடினேன்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய போது..
கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய போது..

தஞ்சாவூரில் sales rep ஆக வேலை பார்த்தேன். நானே ஸ்பான்சர் வாங்கி படித்தேன். என் அப்பாவைப் போல் இல்லாமல் மனைவியை மதிக்கிற ஒருவர் கணவராக கிடைக்க வேண்டினேன். ஏதேதோ பிறவிகளில் நான் செய்த புண்ணியம் பென்னி என் கணவராக கிடைத்தார். யாரும் இல்லாத அந்தப் பெண் உனக்கு வேண்டாம் என அவர் குடும்பத்தினர் சொன்ன போது, பென்னி தன் காதலில் உறுதியாக இருந்து, என்னைத் திருமணம் செய்தார். பென்னியின் பெற்றோர் அப்போது என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, என் பெற்றோர், பென்னியின் அம்மா,அப்பாவிடம் போய்  பணம் கேட்டு பிரச்சினை செய்தார்கள். போச்சு…. எல்லாம் போச்சு…. குழந்தை பிறந்தால் என் மாமனார், மாமியார் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற என் நம்பிக்கையில் என் பெற்றோர் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள்.  பிறந்த குழந்தைக்கு தாத்தா, பாட்டியின் அன்பு கிடைக்காமல் செய்து விட்டார்கள். (நான் மருமகளாக இருந்திருந்தால் வரதட்சணை கேட்டும், ஆண் பிள்ளை பெற்றுத் தர சொல்லியும் கொடுமைப்படுத்தி இருப்பார்கள்).

நானும் என் கணவரும் எந்த பொருளாதார வசதியும், ஆதரவும், உதவி செய்ய யாரும் இல்லாமல் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம். கிடைத்த ஒவ்வொரு மேடை வாய்ப்பையும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டேன். ஒரு மேடையில்  நன்றாக பேசி இன்னொரு மேடை வாய்ப்பைப் பெற்றேன். கர்ப்பமாக இருந்த காலங்களில் வாந்தி மயக்கத்தோடு பட்டிமன்றங்களுக்கு போவேன். அந்த பணத்தை வாங்கி தான் வீட்டில் உலை வைக்க வேண்டும். பேச்சுத் துறையில் கொஞ்சம் அறியப்பட்டவளாக மாறினேன்.சில வருடங்களில், நம்ம பையன் நல்ல பொண்ணை தான் செலக்ட் பண்ணிருக்கான் என மாமனார், மாமியார் மகிழ்ந்தார்கள். பேச்சுத் துறையில் busy யாக வளர்ந்த காலத்தில்  என் பிள்ளைகளை என் மாமியார் தான் மிக பொறுப்பாக வளர்த்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருமதி. சுமதி - தன்னம்பிக்கை, இலக்கிய, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர்,
திருமதி. சுமதி – தன்னம்பிக்கை, இலக்கிய, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர்,

இன்று ஓரளவு முன்னேறியிருக்கிறேன். சொந்த வீடு என்கிற பல வருட தவம் மட்டும் நிறைவேறி விட்டால் போதும். அதற்கு தான் ஓடி ஓடி உழைக்கிறோம். மற்றவர்களைப் போல எனக்கும் பெற்றோர் பணம்,நகை,சொத்து கொடுத்திருந்தால் பொருளாதார ரீதியாக நல்லா வந்திருப்பேனே என்கிற ஆதங்கம் கொஞ்ச நாள் இருந்தது. அம்மா, அப்பா இருக்க கூடாது, இருந்தாலும் அம்மா,அப்பா னு கூப்பிட கூடாது என்ற என் ஜாதக விதியை ஏற்றுக் கொண்டேன்.

என் பெற்றோரால் என் தங்கையின் மனநலம் பாதிக்கப்பட்டது. நான் அந்த கொடுமைகளிலிருந்து தப்பித்து வந்ததால் ஏதோ பிழைத்திருத்திருக்கிறேன். எங்கே போவது என தெரியாமல் திகைத்த போது தன் வீட்டில் தங்க வைத்து சோறு போட்ட என் வகுப்புத் தோழி கிறிஸ்டி யை என்றும் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.

திருமதி. சுமதி - தன்னம்பிக்கை, இலக்கிய, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர்,
திருமதி. சுமதி – தன்னம்பிக்கை, இலக்கிய, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர்,

இத்தனை வருடங்களில் எத்தனையோ கஷ்டங்களிலும், என் பெற்றோரிடம் மட்டும் திரும்பி போய் விட கூடாது என்கிற மன உறுதி தான் என்னை இன்னும் அதிகமாக உழைக்கச் சொன்னது.

நான் ஸ்பான்சர் வாங்கிப் படித்த படிப்பும், என் பேச்சுத் திறமையும், என் பக்க பலமாக இருக்கும் என் கணவரும் தான் அந்த வைராக்கியத்தில் நான் வெற்றி பெற காரணம். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு,இந்த இடத்துக்கு வந்திருக்கோம்  என இன்று காலை மனதில் நினைத்த விஷயங்களை முகநூல் பதிவாக்கி விட்டேன். நான் உழைத்தால் தான் எனக்கு சோறு, எனக்கான ஒவ்வொன்றையும் நானே உழைத்து பணம் சேர்த்து தான் வாங்க வேண்டும் என்பது தெரியாமல்…. நீங்க பணம் வாங்காமல் / பணத்தை குறைத்துக் கொண்டு பேசலாமே… சேவை செய்யலாமே…என்பவர்களுக்காகவே இந்த பதிவு .

புகைப்படம் : நல்ல ட்ரெஸ் இல்லாமல்,  என்னை விட உடல் பருமனான வகுப்புத் தோழியின் உடையை இரவல் வாங்கி, கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய போது….

எல்லோருக்கும் நிறைய அன்பு.நல்லாருப்போம்!

திருமதி. சுமதி – தன்னம்பிக்கை, இலக்கிய, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர்,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

2 Comments
  1. Karna says

    பேச்சாளர் சுமதி அவர்கள் ஒரு முறை திருவாரூரில் பேச அழைத்திருந்தார்கள்
    சிறப்பாக பேசினார்.
    வாழ்த்து சொன்னேன், அவர் கம்பீரமாக பேசிய படத்தை முகநூலில் அனுப்பி வைத்தேன்
    நன்றி சொன்னார்.

    சுமதி அவர்களின் வாழ்க்கைப் பயணம்
    படிப்போர் உள்ளத்தை கலங்க செய்யும்.
    தடைகளை தகர்த்து, நெருப்பாற்றை கடந்து வெற்றி பெற்ற சுமதி அவர்களின் வெற்றி பயணம்…

    அவரைப் போன்று போராடும் பெண்களுக்கு
    தன்னம்பிக்கை தரும்.

    தங்கள் பயணம் இன்னும் நீள தங்களுக்கு வாழ்த்துகள்.

    – ஆரூர் செ. கர்ணா.

  2. Karunanithi says

    பேச்சாளர் சுமதி அவர்கள் ஒரு முறை திருவாரூரில் பேச அழைத்திருந்தார்கள்
    சிறப்பாக பேசினார்.
    வாழ்த்து சொன்னேன், அவர் கம்பீரமாக பேசிய படத்தை முகநூலில் அனுப்பி வைத்தேன்
    நன்றி சொன்னார்.

    சுமதி அவர்களின் வாழ்க்கைப் பயணம்
    படிப்போர் உள்ளத்தை கலங்க செய்யும்.
    தடைகளை தகர்த்து, நெருப்பாற்றை கடந்து வெற்றி பெற்ற சுமதி அவர்களின் வெற்றி பயணம்…

    அவரைப் போன்று போராடும் பெண்களுக்கு
    தன்னம்பிக்கை தரும்.

    தங்கள் பயணம் இன்னும் நீள தங்களுக்கு வாழ்த்துகள்.

    – ஆரூர் செ. கர்ணா.

Leave A Reply

Your email address will not be published.