எம்ஜிஆர் 37- வது நினைவு தினம் : மொட்டையடித்து தனது நினைவஞ்சலியை செலுத்திய கல்லூரி மாணவர் !
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்று இ.எஸ்.ஐ. மருந்தகம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அப்போது சிலையின் அருகே கல்லூரி மாணவர் கெளசிக் என்பவர் மொட்டை அடித்து எம்ஜிஆர் க்கு தனது நினைவஞ்சலியை செலுத்தினார். கல்லூரி மாணவர் கௌசிக்கின் தாத்தா மலையாண்டி, அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்தவர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அவர் தொடர்ச்சியாக 31 ஆண்டுகள் எம்ஜிஆர் நினைவு நாளில் மொட்டை அடித்து எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்,, அவருக்கு பின்னர் அவருடைய பேரனான கௌசிக்கும் இந்த ஆண்டு மொட்டையடித்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
— மணிபாரதி.