துருக்கியின் வளமான வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ”மில்லியன் லிரா  நாணயம்” – சிறப்பு சொற்பொழிவு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் துருக்கி நாட்டின் மில்லியன் லிரா நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் நிறுவன தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நூலகப் பணியாளர் மீனாட்சி சுந்தரம்,செயலர் குணசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம்
பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம்

அங்குசம் இதழ்..

நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் துருக்கி நாட்டின் மில்லியன் லிரா  நாணயம் குறித்து பேசுகையில், “13 ஆம் நூற்றாண்டில் பிறந்த யூனுஸ் எம்ரே என்ற டெர்விஸ் யூனுஸ் கவிஞரும் சூஃபி தத்துவஞானியும் ஆவார். 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நினைவார்த்த 1 மில்லியன் லிரா நாணயம் யூனுஸ் எம்ரேயின் வாழ்க்கை மற்றும் மரபுகளை நினைவுபடுத்துகிறது.

அவருடைய கவிதைகள் துருக்கியர்களின் தலைமுறைகளையும் உலகெங்கிலும் உள்ள மக்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.  அவருடைய படைப்புகள் ஆன்மீக ஆழம் மற்றும் உலகளாவிய ஈர்ப்புக்காக கொண்டாடப்படுகின்றன. பாரசீகம் அல்லது அரபு மொழியில் எழுதப்பட்ட அவரது கவிதை, துருக்கிய இலக்கியம் மற்றும் அடையாளத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மில்லியன் லிரா  நாணயம்
மில்லியன் லிரா நாணயம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நாணயத்தின் முகப்பில் துருக்கியின் தேசிய அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் குறிக்கும் பிறை மற்றும் நட்சத்திரத்துடன் லாரல் இலைகளின் நடுவே துருக்கியின் 1 மில்லியன் லிரா 2002, புழக்கத்தில் விடப்படாத  நாணயத்தை உற்பத்தி செய்யும் அதிகாரபூர்வ நாணயத் தொழிற்சாலையான துருக்கிய ஸ்டேட் மிண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.  மறுபக்கம் யூனுஸ் எம்ரே மார்பளவு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

துருக்கி, ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றையும் கொண்டுள்ளது.  பல்வேறு நாகரிகங்கள், பேரரசுகள் மற்றும் கலாச்சாரங்களின் தாயகமாக இருந்து வருகிறது, துருக்கி. நாட்டின் நாணயங்கள் அதன் வளமான வரலாறு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. நாணயங்கள் சேகரிப்பாளர்களுக்கு துருக்கியின் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் பற்றிய  பார்வையை வழங்குகின்றன.

ஒவ்வொரு நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்றார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர் முன்னதாக சுடுமண் கலன் சேகரிப்பாளர் சந்திரசேகரன் வரவேற்க வரலாற்று துறை மாணவர் அரிஸ்டோ நன்றி கூறினார்.

 

தகவல் : விஜயகுமார்,

நிறுவன தலைவர்,

பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.