காணாமல் போன CEO ! முற்றுகையிட்ட மாணவர் சங்கம்!
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கிருஷ்ண பிரியா என்பவரை சமீப காலமாக காணவில்லை.
பள்ளி கல்வி வளாகங்களில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும் மாணவ சங்க நிர்வாகிகள் ceo கிருஷ்ண பிரியாவை சந்திக்க வந்தால் சந்திக்க முடிவதில்லை.
அவரும் வருபவர்களை சந்திக்க தயாராக இல்லை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாநில இணைச்செயலாளர் ஜி.கே மோகன் தலைமையில் மாணவர்கள் பேரணியாக வந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவல் தறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பெயரில் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.