அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

போராட்டம்தான் வாழ்க்கை! BATTLE படம் சொல்லும் சேதி!

திருச்சியில் அடகு நகையை விற்க

போராட்டம்தான் வாழ்க்கை என்றால், அதை சரியாக நடத்தச் சொல்லும் “BATTLE” திரைப்படம்!

இயக்குநர் நாராயணன் தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே புதிய கோணத்தில் சிந்திக்கும் குணம் கொண்டவர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கல்லூரியில் படிக்கும் காலத்தில் கல்வி உரிமைக்காக, மாணவர் நலனுக்காக இளைஞரான நாராயணன் தனது தோழர்களுடன் இணைந்து பல சாகசங்களை புரிந்துள்ளார்.

அதன் தொடர்ச்சிதான், தனது கலைப் பயணத்தில், திரைப்படத்தை  இயக்க மேற்கொண்டுள்ள முதல் முயற்சியிலேயே பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார்.

முதல்வர் பிறந்தநாள்

வணிக ரீதியாக திரையிட வாய்ப்புள்ள ஒரு படத்தை சுமார் அறுபது நாட்களுக்குள் தயாரித்து முடிப்பது எளிதான காரியமல்ல.

தன்னை நம்பி படம் தயாரிக்க முற்பட்ட தயாரிப்பாளர் எந்த வகையிலும் இழப்பை சந்தித்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் ஒரு படத்தை இயக்கி இருப்பது, இவர் திரைத்துறையில் சிகரத்தை தொடுவார் என்பதற்கான சான்று.

ஒரு சொல்லுக்கான பொருளில் பல பரிமாணம் உண்டு. எந்த சூழலுக்கு அந்த சொல் பயன்படுத்தப்படுகிறதோ அதற்கேற்ப அதன் பொருள் அமையும்.

கடினமான ஒன்றை நிறைவேற்ற  கடும்முயற்சி மேற்கொள்வதை குறிக்க  தமிழில் “போராட்டம்” என்ற சொல்லைப் பயன்படுத்துவோம். அதற்கு நேரான பொருள் தரும் ஆங்கிலச் சொல் “Battle” (பேட்டில்).

தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் ஏன் வைக்க வேண்டும்?  இயக்குநருக்கு தமிழ்ப் பற்றில்லையா? என்ற கேள்வி எழலாம்.

இயல்பான மனித வாழ்க்கையில் பள்ளிக்கு போய் நாலு ஆங்கில வார்த்தை தனது பிள்ளை கற்றுக் கொள்ளாதா என்ற ஏக்கத்தில், தனது வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் இழக்கும் பெற்றோர் கனவை நிறைவேற்ற, பிள்ளைகள் பள்ளியில் நடத்துவது பெரும் “பேட்டில்”தான்.

காதலிப்பதும் ஒரு பேட்டில் தான்.  தமிழில் இல்லாத சொல் சாதி.  அதுதானே காதலுக்கு முதல் எதிரி. எனவே காதலிப்பதை “பேட்டில்”  என்றுதான் சொல்ல முடியும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இசைப்பாடலில் நம்ம ஊர் உழைக்கும் மக்களின் கானாவிற்கு நிகர் தான் மேற்கத்திய உழைக்கும் மக்களின் “ராப்” (RAP) இசை. ராப் பாடகர்கள் பிரபலமடைய பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. பல்வேறு பேட்டிலுக்கு பிறகுதான் அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது.

“Don’t stop ’til you get enough” என்ற படமே உலகின் ராப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் அவர்களின் முதல் குறும்படம். 1979ல் வெளிவந்த அவரின் தனி நடன – நடிப்புடன் வெளிவந்த அந்த படத்தின் பாடலில் “Don’t stop ’til you get enough – Keep on, with the force, don’t stop” என்பார். உனக்கு தேவையான அளவு கிடைக்கும் வரை நீ நிற்காதே! பெரும் பலத்துடன் தொடர்ந்து இயங்கு, நிற்காதே! என்பதே அந்த பாடலின் மையக் கருத்து.

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

ஆமாம், இயக்குநர் நாராயணன் தனக்கு தேவையான அளவு வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட “பேட்டில்” பெரும் ஊக்கத்தைத் தரட்டும்.

பேட்டில் (BATTLE) மூலம் திரைத்துறையில் தனது பேட்டிலை தொடங்கி இருக்கும் இயக்குநர் நாராயணன் அனைத்து வகையிலும் தனது முயற்சியில் வெற்றி பெறுவர்.

ELITE Talkies திரு. K. பாஸ்கரன் தயாரிப்பில் திரைத்துறையில் எழுகதிராய் உதயமாகி இருக்கும் நாராயணன் இயக்கத்தில் வெள்ளித்திரையில் காட்சிக்கு வரும் இசைக்காவியம் “பேட்டில்” (BATTLE)  திரைப்படத்தை, திரையரங்குகளில் நமது உற்றார், உறவினர், நண்பர்கள் புடைசூழ பார்த்து மகிழ்வோம்.

இத்திரைப்படத்தின் கலைஞர்கள் அனைவரும் தத்தம் துறையில் பெரும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

நமது வாழ்க்கைப் போராட்டத்தை “BATTLE” திரைப்படம் எந்த அளவு நேர்த்தியாக சித்தரிக்கிறது என்பதை திரையில் பார்த்து உரையாடுவோம்.

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.