2024 எம்பி ரேஸ் ஸ்டார்ட் ஆச்சு.. அமைச்சர்களின் உள்குத்து அரசியல் ஆரம்பம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எம்பி ரேஸ் ஸ்டார்ட் ஆச்சு.. அமைச்சர்களின் உள்குத்து அரசியல் ஆரம்பம்!

மார்ச் 4, 2023 அன்று கரூர் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “ வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை நான் கரூர் மாவட்டத்தில் தொடங்க வேண்டும் என்றிருந்தேன்: இதோ இங்கே இப்போது துவங்கி விட்டேன்,இதுதான் வருகிற பாராளுமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரக் கூட்டமாக நீங்கள் கருத வேண்டும்“ என்று அறிவித்ததும் உடன்பிறப்புகள் மத்தியில் உற்சாக வெள்ளம். தொடர்ச்சியாக , பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணியாக தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பாளரை நியமித்து கனஜோராக வேகம் காட்டுகிறது திமுக. அதே வேளையில் தலா 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என வாக்குச்சாவடி முகவர் அமைப்பை மைக்ரோ-லெவல் திட்டமிடலுடன் திமுக கவனமாக களத்தில் காரிய மாற்றி வருகிறது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

‘அப்போ கரூரில் காங்கிரஸ் வெற்றி உறுதிதானுங்க’ என்று மேலோட்டமாக நினைத்தால், கரூர் அரசியலில் மேல்மட்ட-உள்வட்ட பேச்சுகள் வேறுவிதமாக உள்ளன. “கரூர்காரங்களா, அவங்க பயங்கரமான ஆட்களாச்சே” என வெளி மாவட்டத்தில் கரூருக்கு ஃபயர் விடும் நிலைமை இருப்பதை கள அரசியலின் எதார்த்தத்திற்கு முகம் கொடுப்பவர்கள் மறுப்பேதுமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.

காங்.கிற்கு ஷாக். உபிகளுக்கு உற்சாகம்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

வருகிற பாராளுமன்ற தேர்தலில், கரூர் தொகுதியில் ஏற்படப்போகும் திருப்பங்களின் ஆரம்ப நிலை இது என்ற போதும், ஒட்டுமொத்தமாக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கும் இடங்களின் எண்ணிக்கையை பெருமளவில் தீர்மானிக்கப்போவது கரூர் தொகுதிதான். தேர்தல் நெருங்கும் வேளையில், ‘காங்கிரசுக்கு ஒரு வகையில் ஷாக்கும், கழக உடன்பிறப்புகளுக்கு உற்சாக செய்தியும்’ வரக்கூடும். காரணம் அவரேதான் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இதுவரையில் கரூர் தொகுதி வெற்றி நிலை

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, கரூர் மக்களவை தொகுதியானது, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), வேடசந்தூர், மணப்பாறை மற்றும் விராலி மலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிளை உள்ளடக்கியதாகும். கடந்த கால பாராளுமன்ற தேர்தல்கள் முடிவுகளின்படி, கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 1957, 1962, 1971, 1977, 1980, 2019 என 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 6 முறை வென்றுள்ளது. 1989, 1991, 1998, 1999, 2009, 2014 இதில் அதிமுகவின் தம்பிதுரை 4 முறை வென்றுள்ளார். ஆனால் 1984, 1989, 1991, 1999, 2004, 2009, 2014 என 7 முறை போட்டியிட்ட திமுக ஒரே ஒருமுறை என 2004ல் மட்டுமே (கே.சி.பழனிச்சாமி) வென்றுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

2019 பாராளுமன்ற தேர்தல் சூழ்நிலை

“ஓர் உறைக்குள் 2 கத்திகள் இருக்க முடியாது” என்பதுதான் கரூர் அதிமுகவின் கடந்தகால கள அரசியல் யதார்த்தம். செந்தில் பாலாஜியும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் உள்ளூர் அதிமுகவில் இருவேறு துருவங்களாக இருந்தனர். அதன் விளைவாகவே 2016க்கு பிறகு உரிய அதிகாரமின்றி அதிருப்தியான செந்தில்பாலாஜி அதிமுகவிலிருந்து டி.டி.வி. தினகரனின் அமமுக பக்கம் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பதவி இழந்தது வரை சகலத்தின் அடிநாதமும் உள்ளூர் அரசியல் விவகாரங்களே. அப்போதைய சூழலில் மீண்டும் அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காது என உறுதியான நிலை, மறுபுறம் கரூர் திமுகவில் கள அரசியல் நாயகராக யாரும் இல்லாதிருந்த நிலை என உணர்ந்த சூழலில் டிசம்பர்-2018ல் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த அதே மாதத்தில் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

கரூரில் தவிர்க்கமுடியாத சக்தி

2019 பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிறுத்திய வேட்பாளரை வெற்றி பெற வைத்ததுடன், அரவக்குறிச்சி இடைத் தேர்தலிலும் ஒரு எம்எல்ஏ வாக மீண்டும் வெற்றி பெற்று, கரூர் அரசியலில் தான் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை என்று நிரூபித்து ,ஸ்டாலினின் நம்பிக்கையை பெற்றார். திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக கரூரில் போட்டியிட்ட காங்கிரஸின் ஜோதிமணி அதிமுகவின் தம்பிதுரையை 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற பெரும் பங்காற்றியதோடு, அரவக்குறிச்சியில் அதிமுக சார்பாக 2016ல் பெற்ற வாக்குகளை விட, திமுகவில் உதயசூரியன் சின்னத்தில் செந்தில்பாலாஜி 2019 இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதுடன், அதன் பின்னர் திமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பையும் பெற்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி
முதல்வர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் செந்தில் பாலாஜி

கொங்கு மண்டலத்தை திமுக வசமாக்கியவர்

சட்டமன்றத் தேர்தல் 2021-ல் கொங்கு மண்டலத்தில் திமுக பின்தங்கிய போதும், கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைத்ததுடன், தனது அரசியல் போட்டியாளரான எம்.ஆர்.விஜயபாஸ்கரை தோற்கடித்து ‘ பவரான துறைக்கு’ அமைச்ச ரானது என செந்தில் பாலாஜி அரசியல் வாழ்வின் இரண்டாம் இன்னிங்ஸில் ஏறுமுகப் பாதை. அதே சமயம், கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற, கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஆனதோடு உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் திமுக வரலாற்று வெற்றி பெற “தீயாக வேலை செய்து அதை சாத்தியமாக்கியவரும் செந்தில் பாலாஜிதான்”.

 

ராகுல் காந்தி - ஜோதிமணி
ராகுல் காந்தி – ஜோதிமணி

ஸ்கெட்ச் போட்டு வெற்றி

எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி செங்கோட்டையன் என கொங்கு மண்டலத்தில் அதிமுக நால்வர் அணியின் வியூகங்களை உடைக்க சிறு பிசிறில்லாமல் ஸ்கெட்ச் போட்டதற்கு சமீபத்திய உதாரணம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.

காட்சிகள் மாறிய காலம்

2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் என இரு வேறு நெருக்கடியான நிலைமையை, அதிமுகவின் அரசியல் எதிர்ப்பை செந்தில்பாலாஜியும் காங்கிரசின் ஜோதிமணியும் ஒன்றாக களத்தில் இருந்து எதிர்கொண்ட சூழல் அரசியலில் இன்றில்லை என்பது இரு கட்சியினரும் உணர்ந்துள்ளனர்.

எந்த சிரத்தையும் எடுக்காத காங்கிரஸ்

மறுபுறம் காங்கிரஸ் கட்சி கரூரில் தனது அமைப்பு ரீதியான படை பலத்தை கூட்டுவதற்கு சிரத்தை மிகுந்த எந்த செயல்பாட்டையும் செய்யவில்லை. நிலவரம் இப்படி இருக்க, இம்முறை கரூர் தொகுதி காங்கிரசுக்கு செல்ல வாய்ப்பில்லை என்பது உள்ளூர் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படும் அரசியல் அப்டேட்.

வாய்ப்பில்ல ராசா கணக்கானது

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

செந்தில் பாலாஜியுடன் அரசியலில் நேரடி முரண் உள்ளபோதும், ராகுல்காந்தி வழியாக திமுக தலைமையிடம் பேசி ஜோதிமணி மீண்டும் சீட் பெற்று விடுவார் என்ற வாதத்திற்கு “வாய்ப்பில்ல ராசா” என உடன்பிறப்புகள் வேறு கணக்கு சொல்கிறார்கள். ‘ஜோதிமணி டெல்லிக்கு எம்.பி.ஆக செல்வார்; ஆனால் கரூர் தொகுதியில் இருந்து அல்ல ‘என மையமாக பேசுகிறார்கள் உடன்பிறப்புகள்.

அமைச்சர் உதயநிதிஸ்டாலின் - அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் உதயநிதிஸ்டாலின் – அமைச்சர் செந்தில்பாலாஜி

8 எம்பி தொகுதிகள் காங்கிரஸ் வசம்

கடந்த காலங்களை கவனமுடன் பரிசீலிப்பது என்பது அரசியல் பாடத்தில் அரிச்சுவடி. “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்ற வடிவேலுவின் வசனம் அரசியலில் நகைச்சுவைக்கானது அல்ல என்றறிக. கடந்த பாராளுமன்றத் தேர்தல்- 2019ல் ஆரணி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி, சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் கிருஷ்ணகிரி என காங்கிரஸ் 8 தொகுதிகளில் வென்றது.

வெளிநாட்டு தூதுவர் போல் எம்பி

வெளிநாட்டுத் தூதுவர் போல” திருச்சிக்கு வந்து போகும் எம்பி திருநாவுக்கரசரை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டுள்ள திருச்சி மக்களுக்கு அடுத்த தேர்தலிலும் அதே போல தூக்கி சுமக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் கிடையாது. “எவ்வளவு அடித்தாலும் தாங்கக்கூடிய ரொம்ப நல்லவர் களான திருச்சி மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு” என்பதை திருச்சி திமுகவும் உணர்ந்திருக்கக் கூடும்.

எம்எல்ஏக்களான காங்கிரசார் வாரிசுகள்

2021 சட்டமன்றத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனும், திருவாடானை தொகுதியில் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரு.மாணிக்கமும் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரசின் மூத்த தலைவர்கள் தங்களுடைய தொடர்ச்சியாக வாரிசுகளுக்கான இடத்தையும் உறுதி செய்து கொண்டுள்ளனர்.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர்
திருச்சி எம்பி திருநாவுக்கரசர்

திருச்சி தொகுதியில் மாற்றமுண்டு

திருநாவுக்கரசரது மகனின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை அவரை சரிக்கட்டி, ஜோதிமணிக்கு திருச்சி மக்களவைத் தொகுதியில் சீட் கொடுக்க வாய்ப்புள்ளதாக உள் விவகார பேச்சுக்கள் அடிபடுகின்றன. தனது மகன் எம்.எல்.ஏ.வாக ஆகிவிட்டபடியால் கசப்பேதுமின்றி அவர் ஒத்துழைப்பு கொடுப்பார் என கதர் தரப்பு கணக்கிடக்கூடும்.

திருச்சி எம்பி தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு ,திருவெறும்பூர் கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இது சார்பாக அமைச்சர் கே.என்.நேருவின் சம்மதமும் ஆலோசனையும் திமுக தலைமைக்கு அதி முக்கியத்துவமானதாகும். ஆனால் “பத்துக்கு எட்டு பழுதில்லை” என்ற வகையில் கே.என்.நேருவை மு.க. ஸ்டாலின் சம்மதிக்க வைத்து, திருச்சி தொகுதி காங்கிரசுக்கு முடிவாகும் பட்சத்தில் ஜோதிமணி வேட்பாளராக ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதே கரூர் பைனான்ஸ் வட்டார மேற்படி தகவல்கள்.

கலைஞர் வென்ற குளித்தலை

கரூரை பொறுத்தவரை செந்தில் பாலாஜியின் டார்கெட்டுக்கு ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டவே சாத்தியங்கள் அதிகம். கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கோட்டைக்குச் செல்ல காரணமாக அமைந்தது கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதி. ஆனால், கரூர் எம்பி தொகுதியை பொருத்தமட்டில் திமுகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி வரலாறு இதுவரை இல்லை. அவ்வகையில் நீண்ட தோல்விப் பாதையில் இருந்து, இரண்டாவது முறையாக கரூர் எம்பி தொகுதியில் மீண்டும் உதயசூரியனை உதிக்க வைப்பதே செந்தில் பாலாஜியின் டார்கெட்டாக இருக்கக்கூடும்.

“டார்கெட் அமைச்சர்”- ஸ்டாலின் ஃபயர்

“எப்போதும் எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி. நான் அவரை அடிக்கடி டார்கெட் அமைச்சர் என்று சொல்வேன்; தனக்கான ஒரு டார்கெட்டை அவரே உருவாக்கி வைத்துக்கொண்டு அதை செய்துகாட்டக் கூடிய ஆற்றல் நம்முடைய செந்தில் பாலாஜிக்கு உண்டு. அது கட்சிக்காக இருந்தாலும் சரி, ஆட்சிக்காக இருந்தாலும் சரி. அந்த இலக்கை அடைந்து காட்டுவார்” என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் செந்தில் பாலாஜிக்கு பயர் விட்ட தருணம்.

ஜோதிமணி
ஜோதிமணி

பாராளுமன்ற வளாகம் போல் மேடை

செந்தில் பாலாஜி கடந்த 2018-ல் திமுகவில் இணைந்தபோது, கரூரில் நடத்திய இணைப்பு விழா மேடையை “அண்ணா அறிவாலயம்” போல அமைத்திருந்தார்.
மேலே குறிப்பிட்ட பொற்கிழி வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் ” கரூரிலிருந்து இதோ இந்த மேடையில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறேன்” என்று அறிவித்த பொதுக்கூட்ட மேடையை “பாராளுமன்ற வளாகம்” போல அமைத்து 2024 பாராளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதிக்கான தனது டார்கெட்டை உடன்பிறப்புகளுக்கு குறிப்பால் உணர்த்தியுள்ளார் செந்தில் பாலாஜி. எண்ணவோட்டங்களை கணித்தல் மற்றும் தனது அரசியல் காய்நகர்த்தல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்து வெற்றி அடைதல் ” என்ற இவ்விரண்டிலும் வெகுஜன அரசியலில் கள நாயகர்களாக வெற்றி பெற்றவர்கள் கைதேர்ந்தவர்கள்.

“செந்தில் பாலாஜி இந்தத் தேர்தல் கலையில் டிஸ்டிங்ஷன் வாங்குபவர்” என்பது அவரது அரசியல் எதிரிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. ஆனபோதும் ஜனநாயகத்தில் இறுதி எஜமானர்கள் மக்களே செந்தில் பாலாஜியின் டார்கெட்டுக்கு வெற்றி கிடைக்குமா என்பதை அறிய மக்கள் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் மே 2024 வரை

-எஸ்.ஆர்

வைகோ மகன் துரை வைகோ திருச்சி எம்.பி. வேட்பாளரா ! 

செய்திக்கான லிங்…

https://angusam.com/trichy-mp-candidate/

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.