அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஏழைகளை பணக்காரனாக்கும் ஜாக்பாட் !

திருச்சியில் அடகு நகையை விற்க

ஒரு காலத்தில் பத்து ரூபாயை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கூட பந்தாவாக ஒரு நாளை வலம் வர முடியும். ஆனால், இன்றோ பத்தாயிரம் ரூபாய் என்றாலும் போற இடம் தெரியவில்லை என்று புலம்பும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குருவி சேர்ப்பது போல, வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி சேமித்த பணத்தை எதில் முதலீடு செய்வது? யாரை நம்பி முதலீடு செய்வது? என்ற கேள்விகள் அச்சமூட்டுகின்றன. ஆன்லைன் வர்த்தகம், கிரிப்டோ கரண்சி, முதலீட்டு அதிக வட்டி, பல்வேறு கவர்ச்சித் திட்டங்கள் என்பது போன்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி பலரும் பலவிதமான மோசடிக்காரர்களிடம் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

தங்கமும் கூட ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், எந்த காலத்திலும் இறக்கத்தையே சந்தித்திராத ஒரே பாதுகாப்பான முதலீடு என்றால் நிலத்தில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமானது என்பதாக பொருளாதார அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

Lion ரூபன் கோவிந்தராஜ்
Lion ரூபன் கோவிந்தராஜ்

இதுபோன்று நிலத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கில், திருச்சி – மணப்பாறையில் MSM Garden City என்ற பெயரில் புதிய வீட்டுமனைத்திட்டத்தை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கிறார், வரம் புரோமோட்டர்ஸின் உரிமையாளர் Lion ரூபன் கோவிந்தராஜ்.

https://www.livyashree.com/

“அதிக விலை கொடுத்து வீட்டு மனைகளை வாங்கிப்போட்டுவிட்டு அதன் மதிப்பு சிறுக சிறுக உயர்வதைக் காட்டிலும், இளமையில் குறைவான விலையில் வீட்டு மனைகளை வாங்கிப்போட்டு எதிர்காலத்தில் முதுமையில் சந்தோஷமாக வாழுங்கள்” என்கிறார், அவர்.

திருச்சி – திண்டுக்கல் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையில் MSM Garden City என்ற பெயரில் DTCP (45/2024) அப்ரூவல் பெற்ற வீட்டு மனை அறிமுக விழா எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கிறார்.

MSM Garden CityMSM Garden City-யின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசுகையில், “சென்னையின் நீட்சியாக எப்படி செங்கல்பட்டு வளர்ச்சியடைந்ததோ, அதுபோல திருச்சியின் நீட்சியாக மணப்பாறை வளர்ச்சியடைந்து வருகிறது. MSM Garden City யிலிருந்து வெறும் 3.5 கி.மீ தூரத்தில் 1100 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது முத்துடையான்பட்டி சிப்காட். உலகின் 4-வது இடத்தில் உள்ள நிறுவனமான ஜாபில் தனது கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது. ஒரகடம், ஓசூரையடுத்து எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்கள் பல இங்கே அமைந்து வருகின்றன. தற்போது சுமார் 25000 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் சிப்காட்டாக இருந்து வருகிறது.” என்கிறார்.

மேலும், ” MSM Garden City-க்கு அருகாமையில் மொண்டப்பட்டியில் 1200 ஏக்கரில் TNPL எனப்படும் தமிழ்நாடு அரசின் காகித உற்பத்தி ஆலை 2014 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 1984 இல் கரூர் புகளூரில் காகித ஆலை தொடங்கப்பட்டபோது அந்த இடமும் ஊருக்கு வெளிப்புறம் என்பதாகவே இருந்தது. ஆனால், வளர்ச்சிப் போக்கில் காகித ஆலையின் வளர்ச்சிக்கு இணையாக அதனை சுற்றி அமைந்த மனைகளின் மதிப்பும் தாறுமாறாக உயர்ந்தது. தற்போது, அதுவே ஒரு கேந்திரமான மையமாகவும் மாறியிருக்கிறது என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.” என்கிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Garden City“அதுமட்டுமல்ல; மணப்பாறை பேருந்து நிலையம், மணப்பாறை இரயில் நிலையம் அருகே அமைந்திருக்கிறது. திருச்சியிலிருந்து மனைப்பிரிவுக்கு செல்லும் வழிநெடுக தமிழ்நாடு சட்டப்பலைக்கழகம், கேர் கல்லூரி, ஜே.ஜே.கல்லூரி என பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

உலகெங்கும் வாழும் பலரின் குலசாமியாக திகழும் நல்லாண்டவர் கோயில் வீட்டு மனைக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது. இதுதவிர, கிறித்துவ இசுலாமிய மத வழிபாட்டு தலங்களும் அருகருகே அமைந்திருக்கின்றன. மும்மதத்தினரும் வாழும் குடியிருப்புகளும் வீட்டு மனைக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. மின்சார வசதியை உடனடியாக பெற முடியும். மனையில் எங்கு போர் போட்டாலும் உத்திரவாதமான நிலத்தடி நீரை கொண்டிருக்கிறது. இன்று TNPL மற்றும் சிப்காட்டுகளால் தொழில்நகரமாக மாறியிருக்கும் மணப்பாறை விரைவில் மாநகராட்சியாக தரம் உயரும் பிரகாசமான வாய்ப்பை கொண்டிருக்கிறது.” என்கிறார்.

Garden Cityபத்தாண்டுகளுக்கும் மேலான ரியல் எஸ்டேட் அனுபவங்களை கொண்ட, வரம் புரோமோட்டர்ஸின் வெற்றிகரமான மனைப்பிரிவுதான் MSM Garden City. இதன் அறிமுகவிழா சலுகையாக, நவம்பர்-23 அன்று மனையின் அறிமுக விழாவில் பங்கேற்று வீட்டுமனையை புக்கிங் செய்பவர்களுக்கு பல்வேறு அதிரடி சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது.

“எந்தவிதமான வில்லங்கங்களும் இல்லாத தெளிவான ஆவணங்களை கொண்ட இந்த மனையின் பத்திரப்பதிவை நாங்களே இலவசமாக செய்து தருகிறோம். பட்டாவையும் இலவசமாகவே பெற்றுத்தருகிறோம். இதுதவிர, 1 கிராம் தங்க நாணயமும், ஸ்பாட் சர்ப்ரைஸ் கிப்ட்டும் உண்டு. மனையின் விலையிலும் அதிரடி தள்ளுபடி சலுகையாக, ரூ.777 அல்ல வெறும் ரூ.699 மட்டுமே.” என்கிறார், பூரிப்போடு.

Garden Cityதிருச்சியை சுற்றி இருப்பவர்களுக்காக மட்டுமல்ல; உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நிலத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று சிந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் குறைவான முதலீட்டில் மனநிறைவை பெறும் வகையில்தான் MSM Garden City-யை உருவாக்கியிருப்பதாக குறிப்பிடும் அவர், இந்த மனை அறிமுக விழாவில் பங்கேற்று  மனையை புக்கிங் செய்வதற்கு ஏதுவாக, மணப்பாறை பேருந்து நிலையம், திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம், திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து மனையை பார்வையிட வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்.

“இது வீட்டு நிலம் மட்டும் அல்ல! இலாபத்திற்கான எதிர்கால கதவு. இது ஏழை பணக்காரனாக்குவதற்கான ஜாக்பாட்” என்கிறார், வரம் புரோமோட்டர்ஸின் உரிமையாளர் Lion ரூபன் கோவிந்தராஜ்.

மேலும் தகவல்களை பெற : +91 74483 04688 | +91 63698 96050

 

—    மித்ரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.