மகிழம்பூ முறுக்கு ! சமையல் குறிப்பு – 41
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி மகிழம்பூ முறுக்கு. மொறு மொறுன்னு ஈசியா கரஞ்சியா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 100 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், பச்சரிசி 200 கிராம், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, பெருங்காயத்தூள் 2 சிட்டிகை, முறுக்கு அச்சு 1.
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பு கடலைப்பருப்பை சிவக்க வறுத்து ஆறவிட்டு தண்ணீர் விட்டு களைந்து நிழலில் உலர்த்திய பச்சரிசியுடன் சேர்த்து அரைக்கவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான நீர் விட்டு மாவை பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும். தேவைப்பட்டால் இதில் பொடித்த மிளகாய் அல்லது எள் சேர்த்து மாவுடன் பிசைந்து முறுக்கு பிழியலாம். முறுக்கு காரமாக நன்றாக இருக்கும்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.