முரசொலி அலுவலக நிலம் வழக்கு – விசாரிக்க போகும் பட்டியலின ஆணையம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முரசொலி அலுவலக நிலம் வழக்கு

 

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசியப் பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

Sri Kumaran Mini HAll Trichy

இந்தப் புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது என்றும் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணையில் முரசொலி அறக்கட்டளை தரப்பு, “பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் சமயத்தில் பட்டியலின ஆணையம் தலையிட்டுத் தீர்வு காண முடியுமே தவிர உரிமையியல் வழக்கு விவகாரங்களில் நீதிமன்றங்களே தீர்வு காண முடியும்.” எனத் தெரிவித்தது. பட்டியலின ஆணையமோ, “பஞ்சமி நிலம் குறித்த புகாரை விசாரிக்க வேண்டும் என்பதைத் அறிந்து விசாரணை மட்டுமே நடத்துவதாகவும், சொத்துக்கு யார் உரிமை என்பதை தீர்மானிக்கும் வகையில் நீதிமன்றப் பணியைச் செய்யப்போவது இல்லை.” எனத் தெரிவித்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருவாய் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்னை நுங்கம்பாக்கம் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 1952ஆம் ஆண்டுக்கான ஆவணங்களின்படி அது பஞ்சமி நிலம் இல்லை என்றும் ரயத்துவாரி நிலம் என வகைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 1912 ஆம் ஆண்டுக்கு முன் நிலம் யாருக்குச் சொந்தம் என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, 50 ஆண்டுக்கான ஆவணங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறி வருவாய் துறை, மற்ற ஆவணங்கள் இல்லை என்றது.

அப்போது முரசொலி தரப்பு வழக்கறிஞர், “பஞ்சமி நிலமாக இருந்தால் யாருடைய பெயருக்கும் பதிவுத்துறையில் பட்டா மாறுதல் பதிவு செய்ய முடியாது என்றும், சந்தேகமும் இல்லாத பட்சத்தில் பட்டாவை மட்டுமே மாறுதல் செய்ய அனுமதிக்கப்படும்.” என்றது. பட்டியலின ஆணையமோ, “புகார்களை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது. பட்டியல் இனத்தவர்களின் நலன் பாதிக்கப்படும் போது விசாரணை செய்வது இயல்பு. புகாரில் உண்மை இருந்தால் தொடர்ந்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யும்.” என்றது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (10/01/2024) நீதிபதி தீர்ப்பளித்தார். முரசொலி நிலம் தொடர்பான வழக்கைப் பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அனைத்துத் தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.