அம்மா நான் நானாக இருக்கிறேன்; நீ நீயாகவே இருப்பதால் – என் பலம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என் பலம்!  வாழ்வில் இதுவரை எனக்கு பிடித்தவற்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். அதை செய்கிற போது பிரச்சினைகள் வரும்; மோசமான சிக்கல்கள் வந்திருக்கும் ஆனாலும் படிப்பு தொடங்கி தொழில் வரை எனக்கு பிடித்ததை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு ஒரே காரணம் நான் இல்லை ; அம்மா தான்!

 

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

நினைக்கும்போதே இப்படியும் ஒருவர் இருப்பாரா என்ற ஆச்சரியத்தை அம்மா எனக்கு கொடுக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை. அப்படியான ஆச்சரியப்படத்தக்க செய்திகள் நிறைய இருப்பினும் “நீட் எதிர்ப்பு” என்ற முழக்கம் முதலில் எனக்கு நினைவுப்படுத்துவது அம்மாவை தான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

2010 ஆம் ஆண்டு அப்பாவின் மறைவின் போது எனக்கு வயது 15. அம்மா ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்தார். எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் செய்ய முடியாது; கூடாது என்ற என் குரலால், 15 வயசு சின்னபுள்ள பொம்பள புள்ள வாய் பேசுது என்ற கடுப்பிலும், அவர்களின் ஜாதிய சிந்தனையில் மண் அள்ளி போட்ட வெறுப்பிலும் அப்பாவின் இறுதி மரியாதை அன்று விட்டு சென்ற அப்பாவின் உறவினர்கள் அதன்பின் எங்களை திரும்பி பார்க்கவில்லை.

மதிவதினியும் - அம்மாவும்
மதிவதினியும் – அம்மாவும்

 

 

போன வரை நிம்மதி என்று நாங்கள் எங்கள் வாழ்க்கை பயணத்தை கொள்கை பயணமாக தொடர்ந்தோம்.

நான் கல்லூரி படிக்கும்போதே முதன்மையான பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கப்பெற்றேன். அதற்கான பணி நியமன கடிதம் 2017 மார்ச் மாதம் வந்தது. 6 மாதங்கள் ஒரிசாவில் பயிற்சி, வேலை இடம் பெங்களூர். வேலைக்கு செல்வதற்கு அனைத்தையும் தயார் செய்து கொண்டிருந்தோம்.

2017 மார்ச் 18-22 வரை திராவிடர் கழகம் சார்பில் “நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணம்” ஏர்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 5 குழுக்கள். அதில் கோவை – விருத்தாசலம் வரை சென்ற குழுவில் நான் பேச்சாளர்.

இதற்கு மேல் தான் டிவிஸ்ட். மார்ச் 20 ஆம் தேதி ஒரிசாவில் பயிற்சியில் சேர வேண்டிய நாள். வேலையில் இரண்டு நாள் கழித்து வந்து சேருகிறேன் என்று எல்லாம் சொல்ல முடியாது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

நான் எதை பற்றியும் யோசிக்காமல் (வழக்கமாக முடிவு எடுத்துவிட்டு தான் யோசிப்பேன்) அம்மாவிடம் சென்று நான் வேலைக்கு போகல நீட் எதிர்ப்பு பிரச்சாரம் இருக்குனு சொன்னேன். அவர் வேறு எந்த கேள்வியும் என்னிடம் கேட்காமல் “சரிப்பா 5 நாளா கறுப்பு டிரெஸ் இதுல எடுத்து வச்சுடுவோமா?” என்றார்.

இன்று நினைத்து பார்த்தாலும் பிரமிப்பாக தான் இருக்கு. அன்றைக்கு இருந்த சூழலில் அம்மா மட்டும்தான் வீட்டில் சம்பாதிப்பவர் ; வேலைக்கு போனால் கை நிறைய சம்பளம் பெற்றால் அது எல்லா வகையிலும் அவருக்கு பயனாக அமைந்திருக்கும். ஆனால் கொள்கை வழியே வளர்த்த என்னை, என் வழியில் விட்டுவிடுவதே சரி என்ற அம்மாவின் எண்ணம் என் வாழ்வில் என்றும் ஆச்சரியம் தான்.

இந்த முறை ஜூலை 11 – 15 வரை “நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணம்” 5 குழுக்கள் புதுச்சேரி – சேலம் வரை செல்லும் குழுவில் நான் பேச்சாளர்.

தொல்பொருள் குறித்த டிப்ளமோ படிப்பு ஒன்றை தொலைதூரக் கல்வியில் படிக்கிறேன். அதன் ஒரு தேர்வு சரியாக பரப்புரை பயண நாட்களில் வருகிறது. அம்மாவிடம் சென்று “அம்மா அந்த exam என்று ஆரம்பித்து நான் முடிப்பதற்குள் , “இதவிட அதான மதிமா முக்கியம் என்றார்”. (என் இனம் அல்லவா நீ மொமென்ட்)

அது சரி தான் மா, வேலைக்கு போகலனு சொன்னதே உனக்கு பெருசா இல்ல, டிப்ளமோ பரீட்சைலாம் உனக்கு ஒரு பிரச்சனையா என்று இருவரும் பேசி பேசி 7 வருடங்கள் முன்பு நடந்ததை எல்லாம் நினைவுப்படுத்தி சிரித்தோம்.

ஆம். என் ஒற்றை பலம் அம்மா தான்❤ எதைப்பற்றியும் யாரை பற்றியும் யோசிக்காமல் எனக்காக மட்டுமே நிற்பது அம்மா தான்!

Tq for being mine❤
Tq for being my support❤
Tq for tolerating me❤
Tq for loving me❤

லவ் யூ மா🥰 அம்மா நான் நானாக இருக்கிறேன்; நீ நீயாகவே இருப்பதால்❤

பிறந்தநாள் வாழ்த்துகள் மா❤

Mathivadhani

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.