ஊடக அறம் !  நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஊடக அறம் !  நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத் –

 

“திமுக – பாஜக கூட்டணி அமையும் : சி.வி.சண்முகம் கூற்றை நியூஸ் 18 விவாத பொருளாக்கியிருப்பது தொகை பெற்றுக்கொண்டுதான்”சொல்லதிகாரம் நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கடந்த டிசம்பர் 18ஆம் நாள் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பாஜக சொல்வதைத்தான் திமுக அரசு செய்து வருகின்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி அமையும் என்று பேசினார்.

ஆர்பாட்டத்தில் சி.வி. சண்முகம்
ஆர்பாட்டத்தில் சி.வி. சண்முகம்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்தப் பேச்சை 18ஆம் நாள் இரவு நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியின் சொல்லதிகாரம் நிகழ்ச்சியில் விவாதத்திற்குரியத் தலைப்பாக இருந்தது. இந் நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தம்பி தமிழரசன் என்ற பெயரில் பணியாற்றியவர், தற்போது நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார்.  இப்போது பா.தமிழரசன் ஆகியுள்ளார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்களிடம் நெறியாளர் தமிழரசன், “திரு.நாஞ்சில் சம்பத், பாஜக சொல்வதைத்தான் திமுக அரசு செய்துவருகின்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக திமுக கூட்டணி அமையும் என்று அதிமுகவின் முன்னணித் தலைவர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் குறிப்பிட்டுள்ளரே, கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?” வினாவை முன்வைத்தார்.

நாஞ்சில் சம்பத் பதில் அளிக்கத் தொடங்கும்போது, “இப்படி ஒரு வேலையை நியூஸ் 18 தொலைக்காட்சிக்குக் கொடுத்திருக்கிறார்களா? திமுக கூட்டணியைப் பிரிப்பதற்கு, பிளப்பதற்கு உங்களுக்கு அஜெண்டா தந்திருக்கிறார்களா? சி.வி.சண்முகம் பேசியதை இன்று விவாதப் பொருளாக மாற்றவேண்டிய அவசியம் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ஏன் வந்தது? ஏதாவது தொகை வாங்கியிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

நெறியாளர் தமிழரசன்,“எங்களுக்கு யாரும் எந்த அஜெண்டாவும் தரவில்லை. சி.வி.சண்முகம் அதிமுகவின் முன்னணித் தலைவர். அவர் பேசியதை ஏன் விவாதப் பொருளாக ஆக்கக்கூடாதா?” என்றார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத் –
நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத் –

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத்,“சி.வி.சண்முகத்தின் குரல் அண்ணா திமுகவின் குரலா? அண்ணா திமுக நான்காகப் பிரிந்து கிடக்கின்றது. பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவைத் திமுக 100 இடங்களில் நடத்தி, பாஜகவுக்கு எதிராக, சனாதனத்திற்கு எதிராக இன்றைக்குத் திமுக களமாடி வருகின்றது. இந்நிலையில் குடிகாரன்கூட சொல்லமுடியாத ஒரு கருத்தை சி.வி.சண்முகம் கூறியுள்ளார். கவிஞனின் கற்பனைக்கும்கூட ஒரு எல்லை உண்டு. சி.வி.சண்முகம் கவிஞனின் கற்பனையைத் தாண்டி எந்த அடிப்படையும் இல்லாமல் பாஜக கூட்டணி ஏற்படும் என்று கூறியுள்ளார். அதை நீங்கள் விவாதப் பொருளாக மாற்றி தொலைக்காட்சியில் விவாதம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.” என்றார்.

நெறியாளர் தமிழரசன், ஏன் விவாதப் பொருளாக ஆக்கக்கூடாதா?” என்றவுடன், கொந்தளித்த நாஞ்சில் சம்பத்,“ஆக்கவே கூடாது” என்று நெறியாளரின் பொட்டில் அறைந்தார்போல் பதில் கூறி தொடர்ந்து நாஞ்சில் சம்பத், திராவிட அரசியல், ஆரிய அரசியல் என்று தேசிய அளவில் இருதுருவ அரசியலை திமுக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் பாஜக – திமுக கூட்டணி என்று விவாதிப்பது தேவையற்றது என்று சம்பத் உரத்தகுரலில் சொன்னபோது நெறியாளர் தமிழரசன் கொஞ்சம் ஆடித்தான் போனார் என்றே சொல்லவேண்டும்.

நெறியாளர் தமிழரசன்,“சம்பத் சி.வி.சண்முகம் சொன்னதிற்கு நீங்கள் பதில் சொல்லலாம். அதை விடுத்து என் கேள்விகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. அதற்கு இடமில்லை” என்றார்.

நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசன்
நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசன்

நாஞ்சில் சம்பத், பாஜகவின் குரலாக இங்கே ஆளுநர் போட்டி அரசு நடத்திக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் உள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் இரகுபதி நேரில் விளக்கம் அளித்துவிட்டார். ஆனால் இன்று வரை சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்துபோடவில்லை. இந்நிலையில், பாஜக-திமுக கூட்டணி என்று விவாதிப்பது எந்த அடிப்படையும் இல்லை. தேவையற்றது. இந்தப் பேச்சு அரசியல் அநாதையின் புலம்பல், அர்த்தமற்ற ஆரவாரம். இந்தியத் துணைக்கண்டத்தில் பாஜகவை எதிர்க்க எல்லாரும் அணி சேர்ந்துகொண்டிருக்கும்போது அரசியல் அநாதையின் புலம்பலை விவாதப் பொருளாக்கியிருப்பது அடிப்படை ஆதாரமற்றது” என்றார்.

நெறியாளர் தமிழரசன், “சம்பத் மீண்டும் மீண்டும் என் கேள்விக்கு உள்நோக்கம் கற்பிக்கவேண்டாம். சி.வி.சண்முகத்தின் மீது மிகவும் கட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளீர்கள். உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகின்றது” என்று ஜகா வாங்கி தமிழரசன் நாஞ்சில் சம்பத்துடனான விவாதத்தை முடித்துக்கொண்டார்.

தொலைக்காட்சிகள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் விவாத பொருளாக மாற்றமுடியும் அதிகார திமிருக்கு எதிராக நாஞ்சில் சம்பத் கொடுத்த சம்மட்டி அடிகள் தொடரவேண்டும். ஊடக அறம் காக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்கமுடியாது என்பதே உண்மை.

– ஆதவன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.