“திங்க் சேலம் 2025” தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் மாநாடு!
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் “திங்க் சேலம் 2025” என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் மாநாடு டிசம்பர் 20, 2025 அன்று காலை 9:00 மணிக்கு ஸ்ரீ வள்ளியப்பா அரங்கில் நடைப்பெற்றது. சோனா கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சொக்கு வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சோனா கல்லூரியின் முதல்வர் மற்றும் சோனா இன்குபேஷன் ஃபவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். ஆர். ஆர். செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார்.
சோனா இன்குபேஷன் ஃபவுண்டேஷன் (Sona Incubation Foundation) மற்றும் சோனா நிறுவனம் (The Sona Group) இணைந்து நடத்தும் இந்த ஒரு நாள் மாநாடு, முதலீட்டாளர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் (MSMEs) இதன் மூலம் பயனடையும். இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) இக்னிஷன் கிராண்ட் (Ignition Grant) நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான வாய்ப்புகள்: சி.எஸ்.ஆர் (CSR) முகமைகளின் எதிர்பார்ப்புகள், இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புற ஸ்டார்ட்-அப்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள்: தொழில்நுட்ப தாக்கத்தின் மீதான கவனம், ஸ்டார்ட்-அப்களில் அரசு பங்களிப்பின் முக்கியத்துவம்: எதிர்கால வளர்ச்சி குறித்த கணிப்புகள் என்ற முக்கிய தலைப்புகளில் இந்த மாநாட்டில் நிபுணர்களின் உரைகள் இடம்பெற்றன.
இதனைத்தொடர்ந்து, டி.எஸ்.டி இக்னிஷன் கிராண்ட் நிதி விநியோகம், மாணவர்களுக்கான (ஏஐ) சிக்கல் தீர்க்கும் போட்டி மற்றும் வெற்றியாளர்களுக்கான பரிசு வழங்கல் ஆகியவை நடைபெற்றன.மேலும் இந்திய அரசின் டி.பி.டி (DBT) மூத்த ஆலோசகர் டாக்டர் டி. எஸ். ராவ் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். துணைத் தலைவர் மற்றும் ஸ்டார்ட்-அப் பிரிவுத் தலைவர் திரு. சிவகுமார் பழனிசாமி சிறப்புரையாற்றினார். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவ இணைப் பேராசிரியர் திரு. வெங்கட் பட், “கனடாவின் சுகாதாரத் துறையில் (ஏஐ) தொழில்நுட்ப வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவு” குறித்து உரையாற்றினார்.
நிறைவு விழாவில் திரு. சொக்கு வள்ளியப்பா, டாக்டர் ரமணன் இராமநாதன் (தலைவர், NEAC, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை) மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்த மாநாட்டிற்கான ஏற்பாட்டினை சோனா இன்குபேஷன் துறை தலைவர் சத்தியமூர்த்தி சிறப்பாக செய்திருந்தார். இந்த நிகழ்வில் சோனா கலை கல்லூரி முதல்வர் காதர்நவாஷ் கணினி அறிவியல் துறை தலைவர் சத்தியபாமா ஆகியோர் கலந்து கொண்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.