யாருடைய ஆதாயத்திற்காக பொய்களை பரப்பியது NCB ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாருடைய ஆதாயத்திற்காக பொய்களை பரப்பியது NCB ? – டெல்லியில் 15-02-24 அன்று 50 கிலோ Pseudoephedrine பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் @narcoticsbureau

நடத்திய படு அபத்தமான நாடகம் முடிவை எட்டிக்கொண்டுள்ளது 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்காக Deputy Director General பொறுப்பில் இருக்கும் அதிகாரி அரசியல் அடியாளாகவே மாறி இந்த வழக்கை கையாண்டுள்ளார் Rs.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு என NCB-ல் பணியாற்றும் அதிகாரிகள் திட்டமிட்டு Hype-ஐ உருவாக்கி இந்தியா முழுவதும் இந்த விவகாரத்தை பேசு பொருளாக மாற்றியுள்ளனர்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

ஜாபர் சாதிக் என்ற நபர் திமுகவில் பொறுப்பில் இருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு அரசை மொத்தமாக நிலைகுலைய வைக்க  @narcoticsbureau -ன் Operations and Enforcement Wing உள்நோக்கத்துடன் முழுமையாக செயல்பட்டுள்ளது கடந்த பிப்ரவரி 25 ம் தேதி முதல் மார்ச் 9 ம் தேதி வரை கொஞ்சம் கொஞ்சமாக பொய்களை கசியவிட்டு அதை உண்மையாக மாற்ற சதித்திட்டத்தோடு NCB செயல்பட்டது என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஏனென்றால், 09-03-24 அன்று NCB -ன் DDG திரு.ஞானேஸ்வர்சிங் பேட்டி தராமல் போயிருந்தால்,தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் நிச்சயம் தெரிய வந்திருக்காது ஆம்… 15/02/24 -ல் இருந்தே ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டதாகவும்,அவனை 09/03/24 அன்று சிரமப்பட்டு கைது செய்தாகவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் NCB -ன் DDG திருவாய் மலர்ந்த போது தான் விசாரணையின் லட்சணம் புரிந்தது.

ஜாபர் சாதிக் பற்றி மீடியா செய்தி
ஜாபர் சாதிக் பற்றி மீடியா செய்தி

அதாவது, 21/02/24 ல் சென்னை சத்யம் சினிமாஸில் மங்கை திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை பப்ளிக்காக நடத்தி மேடையில் அமர்ந்திருந்த நபரை வலை வீசி தேடிக்கொண்டிருந்ததாக NCB-ன் DDG 09/03/24 அன்று கூறுகிறார் எப்படி… உண்மையில் NCB அதிகாரிகள்,ஜாபர் சாதிக்கை தேடிக்கொண்டிருந்தார்களா அல்லது திமுக அரசுக்கு எதிராக வேறு என்ன அவதூறு பரப்பலாம் என சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆனால், 09/03/24 ம் தேதி NCB -ன் DDG வெளியிட்ட செய்திக்குறிப்பு சர்வதேச போதைப்பொருள் கும்பலின் தலைவனை பிடித்துவிட்டதாக குறிப்பிடுகிறது அந்த பத்திரிகை குறிப்பு கூட திட்டமிட்டே உள்நோக்கதோடு தான் வெளியிடப்பட்டுள்ளதோ என்று தற்போது தோன்றுகிறது ஏன் தெரியுமா ? நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவோடு இணைந்து 6 மாத காலமாக கண்காணித்து NCB-ஆல் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கும்பல் தான் ஜாபர் சாதிக் தலைமையிலான கும்பல் என்று கூறப்பட்டது.

ஜாபர் சாதிக் பற்றி மீடியா செய்தி
ஜாபர் சாதிக் பற்றி மீடியா செய்தி

ஜாபர் சாதிக் என்ற நபர் அந்த கும்பலின் தலைவன் என்று சொல்லப்பட்டது, அப்படிப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனான ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் 10/07/24 அன்று ஜாமீன் வழங்கிவிட்டது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கிற்கு எதிராக ஒரே ஒரு ஆதாரத்தை கூட NCB சமர்ப்பிக்கவில்லை என்று கூறி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வளவு பெரிய கேவலம் இது சர்வதேச நாடுகள் மற்றும் டெல்லி போலீஸின் Special Cell உடன் இணைந்து @narcoticsbureau அதிகாரிகளால் மிக மிக மிக சிரமப்பட்டு கைது செய்யப்பட்ட ஒரு Drug Kingpin க்கு எதிராக ஒரு ஆதாரத்தை சமர்ப்பிக்க இயலவில்லை.

எவ்வளவு பெரிய அவமானம் எருமை மேய்ப்பதற்கு கூட லாயக்கற்ற நபர்கள் எல்லாம் NCB -ன் உயர்ந்த பதவியில் விசாரணை அதிகாரிகளாக இருப்பது இந்த நாட்டிற்கே கேவலம் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தி தமிழ்நாடு என்ற மாநிலத்தில் குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய நினைத்த கும்பலோடு கைகோர்த்து 8 கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய NCB-ன் அதிகாரிகள் மீது முறைப்படி புகார் கொடுத்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் அரசியல் அடியாள் வேலை பார்ப்பதற்கு/பார்த்ததற்கு கொஞ்சமாவது NCB அதிகாரிகள் வெட்கப்படவேண்டும்.

Aravindakshan B R –
Journalist,RTI Activist

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.