பால் வடியும் வேப்பமரம் : அம்மன் அருளா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பால் வடியும் வேப்பமரம் : அம்மன் அருளா? அறிவியல் கூறும் காரணம் என்ன?

வேப்ப மரத்தில் பால்
வேப்ப மரத்தில் பால்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மதம் சார்ந்த நம்பிக்கைகளை தாண்டி, இயல்பாக நடைபெறும் சில விசயங்களுக்கும்கூட மதச்சாயம், கடவுளின் அற்புதம் என்பதாக திரித்துக்கூறி மூடநம்பிக்கைகளாக மக்களிடையே கொண்டு செல்லும் போக்கு அவ்வப்போது நிகழ்வது உண்டு.
காய்கறியில் கடவுள் உருவம்; வானில் தோன்றிய கடவுள் உருவம் என்பது போன்று நீளும் அந்தப் பட்டியலில் வேப்ப மரத்தில் பால் வடியும் நிகழ்வும் ஒன்று.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம் களர்பாளையம் வயல்வெளி பகுதியில் 15 அடி உயரமுள்ள ஒரு வேப்பமரத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் கொட்டுவதைக் கொண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அதேபோல, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டாவர் கோயில் ஊராட்சி திருவள்ளுவர் அவென்யூவில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள பழமையான வேப்ப மரத்திலிருந்தும் இதேபோன்று பால் வடிந்திருக்கிறது. இவ்விரு இடங்களிலுமே, இதனை ஆச்சரியாக பார்த்ததோடு மட்டுமின்றி, ஆண்டவனின் அருள் என்பதாக கருதி வழிபடத் தொடங்கியதுதான் ஹைலைட்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருவண்ணாமலையில், பால் வடிந்த வேப்பமரத்தை அம்மனாக கருதி சிவப்பு சேலை கட்டி ,மஞ்சள் சிவப்பு பூசி, பால் , சந்தனம், பன்னீர் தெளித்து மாலை இட்டு பொங்கல் வைத்து படையலிட்டனர். இந்த தகவல் சிறிது நேரத்தில் கிராமம் முழுவதும் பரவியது. மக்கள் வேப்ப மரத்தின் அருகே குவிந்து அம்மன் இந்த மரத்தில் உள்ளதாக தெரிவித்து வேப்ப மரத்தில் அம்மனின் புகைப்படங்களை கட்டி வைத்து கற்பூரம் ஏற்றி வணங்கி வருகின்றனர்.

வேப்ப மரத்தில் பால்
வேப்ப மரத்தில் பால்

அருள் வந்தபடி பெண் ஒருவர் அந்த வேப்பமரத்தடியில் அமர்ந்து கொண்டார் . திருச்சியிலும் இதே போல, அம்மனே நேரில் வந்ததாக கருதி வழிபாடுகளை நடத்தியதோடு, இளைஞர்கள், பெண்கள் அதை செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?

வேப்பமரங்களில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்று நம்பிக்கையில் இருக்க இதுகுறித்து திருப்பத்தூரில் உள்ள பிரபல கல்லூரியின் தாவரவியல் பேராசிரியரை அங்குசம் செய்திக்காக அணுகினோம், “பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்துக்களை , வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். இந்த நேரத்தில் வேப்பமரத்தின் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால், தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து , மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு இனிப்புப் சுவையுடன் பால் போன்று வடியும்.

மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து துளைகள் அடைபட்டு, பால் போன்ற திரவம் வடிவது நின்றுபோகும். தண்ணீர் அதிகம் உள்ள மரங்களில் வேப்பம் பழங்கள் இனிப்பு கலந்து சுவையுடனும்; தண்ணீர் பற்றாகுறை உள்ள மரங்களில் அதன் பழங்கள் கசப்பு தன்மையுடன் இருக்கும். இவைகள் வேப்பமரங்களின் இயல்பான தன்மைதான். வேப்பமரத்தில் பால் வடிவதற்கான அறிவியல் கூறும் நிரூபிக்கப்பட்ட விளக்கம் இதுதான். அம்மன் இறங்கியுள்ளார் என்பதெல்லாம் மூடநம்பிக்கை. மற்றபடி, அது அவரவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை மட்டுமே” என்று தெரிவித்தார் .

– மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.