மத்திய உளவுத்துறைக்காக வளைந்த காவிரி புதுப்பாலம் !
காவிரி பாலமும்… மத்திய உளவுத்துறையும்.!
திருச்சியையும், ஸ்ரீரங்கத் தீவையும் இணைக்கும் விதமாக புதிய பாலம் அமைக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. காரணம், ஏற்கனவே உள்ள பாலம் பழுதடைந்ததால் அதனை பஞ்சர் ஒட்டியும் ப்ரோஜனம் இல்லை என்பதால் அரசு புதிய பாலமே கட்டிடலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கட்டப்படும் பாலம் பெயரளவு தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கட்டப்படுகிறது என்று விமர்சனம் எழுகிறது.
திருச்சி மாம்பழச் சாலை டூ சிந்தாமணி வரை காவிரி ஆற்றை கடக்கும் விதமாக புதிய பாலம் கட்டும் பணியை தொடங்கியுள்ளது தமிழக அரசு. இதற்காக 107 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பாலம் ஏற்கனவே இருக்கும் பழைய பாலம் அருகேயே அமைய இருக்கிறது. சுமார் 18 மீட்டர் அகலம், 544 மீட்டர் நீளமும் கொண்ட பிரமாண்டமான பாலமாக அமைய உள்ளது. அப்படி பிரமாண்டமான பாலமாக அமைய வேண்டுமென்றால் அரசுக்கு ஒரு சிக்கல் இருந்து வருகிறது.
முழுமையான வீடியோ பார்க்க
பாலம் கட்டும் பணிக்காக காவிரி ஆற்றின் இரண்டு பக்கமும் நிலம் கையகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மாம்பழச் சாலையில் தனியார் அப்பார்ட்மெண்ட், மத்திய உளவுத்துறை அலுவலகம், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அலுவலகம் என அரசுக்கு சொந்தமான இடமாக அமைந்துள்ளது. இந்த பாலம் சீராக அமைய வேண்டுமென்றால் அரசு கட்டடங்களும் அடிப்பட வாய்ப்புள்ளது.
இதில், தமிழக அரசுக்கு சொந்தமான காவல் நிலையத்தையும், எம்எல்ஏ அலுவலகத்தையும் மாற்றியமைத்தால் கூட, நடுவில் இருக்கும் மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய உளவுப்பிரிவு இடத்தை கையகப்படுத்துவது என்பது சவாலாக இருந்து வருகிறது. இதற்காக தற்போது கட்டப்பட்டு வரும் பாலத்தை ஏற்கனவே இருக்கும் பாலத்துடன் இணைத்து கட்ட முடிவு செய்து வருகின்றனர் அதிகாரிகள்.
இதனால் பாலம் கட்டி பொதுமக்களுக்கு ப்ரோயோஜனமே கிடையாது. விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
முழுமையான வீடியோ பார்க்க







