35 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் !
தமிழகம் முழுவதும் 35 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பித்திருக்கிறது. 9 மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்கள்; நால்வருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கியிருப்பது உள்ளிட்டு ஒரே நேரத்தில் இத்துணை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு யூகங்களையும் விவாதங்களையும் தொடங்கி வைத்திருக்கிறது. பொதுவில், நிர்வாக விசயத்தில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த தொடங்கியிருப்பதன் வெளிப்பாடாக இந்த இடமாற்றத்தை பார்க்கிறார்கள்.
புதியதாக மாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விவரம். ஏற்கெனவே வகித்து வந்த பதவி அடைப்புக்குறிக்குள்.
9 மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர்கள் :
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி.தினேஷ் குமார் (மதுரை மாநகராட்சி)
- தருமபுரி மாவட்ட ஆட்சியராக ஆர். சதீஷ் (ஈரோடு கூடுதல் ஆட்சியர்)
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ்.சரவணன் (செயல் இயக்குநர், சென்னை குடிநீர் வழங்கல்)
- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக டாக்டர் ஆர்.சுகுமார் (இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்)
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக எம். பிரதாப் (சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை)
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக வி.மோகன சந்திரன் (பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர்)
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கே.தர்பகராஜ் (மாவட்ட ஆட்சியர் – திருப்பத்தூர்)
- திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே.சிவசௌந்தரவள்ளி (கூடுதல் இயக்குநர், தொழில் மற்றும் வணிக வரித்துறை)
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக எஸ்.ஷேக் அப்துல் ரகுமான் (இணை ஆணையர் நகராட்சி நிர்வாகம்)
மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து வேறு பதவிக்கு :
- தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த கே. சாந்தி – பட்டுப்புழு வளர்ப்புத்துறை இயக்குநராகவும்;
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.என்.பூங்கொடி – வணிக வரித்துறை இணை ஆணையராகவும்;
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சி.பழனி – இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராகவும்;
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எம்.சரயு – பொதுத்துறை இணை ஆணையராகவும்;
- திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி. சாருஸ்ரீ – கணக்கு கருவூலத்துறை இயக்குநராகவும்;
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் டி.பிரபு சங்கர் – சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநராகவும்;
- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர். கே.பி.கார்த்திகேயன் – எல்காட் மேலாண்மை இயக்குநராகவும்;
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் – தமிழ்நாடு சாலைகள் திட்டம் 2-இன் திட்ட இயக்குநராகவும்;
வேறு துறைகளுக்கு :
- திறன் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா – தொழிற்கல்வித்துறை ஆணையராகவும்;
- எல்காட் மேலாண் இயக்குநராக இருந்த ஆர். கண்ணன் – கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநராகவும்;
- DRDA சேலம் நிர்வாகியாக இருந்த லலித்தாதித்ய நீலம் – நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும்;
- தமிழ்நாடு சாலைகள் திட்டம் 2-இன் திட்ட இயக்குநராக இருந்த எஸ்.ஏ.ராமன் – தொழிலாளர் நலத்துறை ஆணையராகவும்;
- விழுப்புரம் கூடுதல் ஆணையராக இருந்த ஸ்ருதஞ்ஜய் நாராயணன் – மின் ஆளுமை திட்டத்தின் இணை ஆணையராகவும்;
- செங்கல்பட்டு கூடுதல் ஆணையராக இருந்த ஆர். அனாமிகா – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் ஆணையராகவும்;
- மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத்துறை செயலாளராக இருந்த சிஜி தாமஸ் வைத்யன் – பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆணையராகவும்;
- மத்திய அரசு பணியில் இருந்த ஆர்.ஜெயா பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரத்துறை – முதன்மை செயலாளராகவும்;
- உள்துறை இணைச் செயலாளராக இருந்த எஸ்.பி.அம்ரித் – கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராகவும்;
- பழனி துணை ஆட்சியராக இருந்த எஸ்.கிஷண் குமார் சிதம்பரம் துணை ஆட்சியராகவும்;
- TWAD மேலாண்மை இயக்குநராக இருந்த வி. தட்சிணாமூர்த்தி – வேளாண்மைத்துறை செயலாளராகவும்;
- பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரத்துறை ஆணையராக இருந்த எஸ். கணேஷ் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சிறப்புச் செயலாளராகவும்;
- கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சங்கர் லால் குமாவத் – உள்துறை கூடுதல் செயலாளராகவும்;
- வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த துர்கா மூர்த்தி – தமிழ்நாடு மாங்கனீஸ் நிறுவனத் (TANMAG) தின் மேலாண்மை இயக்குநராகவும்;
- பொதுத்துறை துணைச் செயலாளராக இருந்த பத்மஜா – DRDA – விழுப்புரம் கூடுதல் ஆணையராகவும்;
- தமிழ்நாடு மின் ஆளுமை இணை முதன்மை செயல் அலுவலராக இருந்த சித்ரா விஜயன் – மதுரை மாநகராட்சி ஆணையராகவும்;
- தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த கவுரவ் குமார்- செயல் சென்னை குடிநீர் வழங்கல் இயக்குநராகவும்;
- கைத்தறித்துறை இயக்குநராக இருந்த ஏ. சண்முக சுந்தரம் – குடிமைப் பொருள் வழங்கல் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும்;
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கூடுதல் பொறுப்பு:
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளராக இருந்து வரும் டாக்டர் தாரேஸ் அஹமது-க்கு கூடுதலாக அதே துறையின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பும்;
துணை முதலமைச்சரின் செயலாளராக இருந்து வரும் பிரதீப் யாதவ்-க்கு கூடுதல் பொறுப்பு: சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளராகவும்;
துணை முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக இருந்து வரும் டாக்டர் எம்.ஆர்த்தி-க்கு கூடுதல் பொறுப்பாக மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும்;
சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரம் அளித்தல் துறை செயலாளராக இருந்து வரும் ஜெயஸ்ரீ முரளிதரன்-க்கு கூடுதல் பொறுப்பாக மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத்துறைச் செயலாளராகவும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.