அங்குசம் சேனலில் இணைய

தீபாவளி புது மாடல் பட்டாசு வெடித்து பலர் படுகாயம் !  வைரல் வீடியோ நடந்தது என்ன ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வணிக நோக்கில் சிறுவர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட புது பட்டாசுகளால் விபத்துகள் அதிகரிப்பு — இணையத்தில் வெளியாகும் காணொளியால் அதிர்ச்சி

சிவகாசி:

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தீபாவளியை முன்னிட்டு சந்தையில் புதிதாக அறிமுகமான “கிட்டார்” மற்றும் “கதாயுதம்” எனப்படும் புது வகை பட்டாசுகள், வெடிக்கும் போது கடும் சத்தத்துடன் தீப்பிழம்பு பறப்பதோடு பல இடங்களில் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

புது மாடல் பட்டாசுசிவகாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களிடம் கள ஆய்வு செய்தபோது, வட மாநில தொழிலாளர்கள் அனுபவமின்மையுடன் பணியில் அமர்த்தப்படுவது, தரக்குறைவான தயாரிப்புகளுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆனால் நிபுணர்கள் கூறுவதாவது, வெடிபொருள் சட்டத்தின் கீழ் மனிதர்கள் கையில் வெடிக்கக்கூடிய பட்டாசு தயாரிப்பதே தவறு. இருப்பினும் வணிக நோக்கில் சில சிறு நிறுவனங்கள் “புது ரக பட்டாசு” என்ற பெயரில் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் விளைவாக இணையதளங்களில் பல விபத்து காட்சிகள் வெளியாகி வருகின்றன.

பட்டாசு விற்பனையாளர்கள் கூறியதாவது:

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பம் எதுவும் இல்லை. ஒரே வகை மூலப்பொருள்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக புது வடிவங்களில் பட்டாசுகளை உருவாக்கி வருகின்றன. தரமான பட்டாசுகளை வாங்க வாடிக்கையாளர்கள் தீபாவளிக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே வாங்குவது நல்லது,” என கூறினர்.

இது குறித்து தனியார் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் சரோஜினி கூறியதாவது

“இந்த ஆண்டு அறிமுகமான ‘கிட்டார்’ மற்றும் ‘கதாயுதம்’ பட்டாசுகளில் அலுமினியம் தூள் மற்றும் நைட்ரேட் கலவையின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெடிக்கும் வேகம், வெப்பம் மற்றும் தீப்பிடிப்பு வலிமை திடீரென அதிகரிக்கிறது. இதுவே விபத்துக்குக் காரணம்,” என அவர் தெரிவித்தார்.

மேலும் “இத்தகைய பட்டாசுகள் PESO அனுமதி பெற்றவை அல்ல எனில், அவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் கையில் பிடித்து வெடிப்பது மிக அபாயகரம். சில விநாடிகளில் பிளாஸ்ட் அளவுக்கு வெடிக்கும் தாக்கம் ஏற்பட்டு தோல் எரிச்சல், கண் சேதம், கைகள் எரிதல் போன்ற தீவிர காயங்கள் ஏற்படலாம்.”

“பட்டாசு மகிழ்ச்சிக்காக; ஆனால் பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படாவிட்டால் அது விபத்தாக மாறும். ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் புதிய மாடல்கள் PESO சான்று பெற்றதா என்பதை பெற்றோர் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்,” என எச்சரித்தார்.

இதையடுத்து சமூக ஆர்வலர்கள், இத்தகைய அனுமதியற்ற பட்டாசுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 —   மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.