புத்தாண்டு கொண்டாட்டம்! புதுச்சேரி போலீஸ் எச்சரிக்கை!
கடலோரப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பின்வரும் விதிமுறைகளை ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் (Hotels & Restaurants) புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள்.
1. கடற்கரையை ஒட்டியுள்ள ஓட்டல்கள் தங்களின் பகுதியில் போதிய எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற உயிர் காக்கும் வீரர்களை (Life Guards) பணியமர்த்த வேண்டும். அவர்களிடம் பின்வரும் உபகரணங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்:
- மிதவை உடைகள் (Life Jackets) மற்றும் மிதவை வளையங்கள் (Life Buoys)
- உயிர் காக்கும் கயிறுகள் (Life saving ropes).
- எச்சரிக்கை விடுக்க ஒலிபெருக்கிகள் ((Megaphones).
- அனைத்து வசதிகளுடன் கூடிய முதலுதவி பெட்டி (First-Aid Kit).
- இரவு நேரத்தில் பணியில் இருக்கும் வீரர்கள் மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் கொண்ட சட்டைகளை (Reflector Jackets) அணிந்திருக்க வேண்டும்.
2. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கூட்டத்தைக் கண்காணிக்கவும்இ அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Towers) அமைக்கப்பட வேண்டும். இந்தக் கோபுரங்களில் இருந்து பைனாகுலர் (Binoculars) மூலம் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும்.
3. புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறையின் முறையான அனுமதியின்ற, படகுகள் மற்றும் குருஸ் கப்பல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று கடலோர காவல் படை சார்பாக அறிவுறுத்துகிறோம்.
4. சமீப காலமாக கடலில் அலைகளின் ஏற்ற‑இறக்கம் அதிகரித்துள்ளதால், புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி கடலில் இறங்குதல், நீராடுதல், குளியல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.