அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சொல்லி அடிச்ச அடுத்த சர்வதேச பதக்கம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

சொல்லி அடிச்ச அடுத்த சர்வதேச பதக்கம்.

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நமது திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் விளையாட்டு கழகத்தை சார்ந்த எட்வினா ஜெய்சன் 400 மீட்டர் ஓட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற MEDLY RELAY போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணியை இரண்டாவது இடத்திற்கு பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நமது திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் விளையாட்டு கழகத்தை சார்ந்த “எட்வினா ஜெய்சன்” 400 மீட்டர் ஓட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற MEDLY RELAY போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணியை இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்து வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இது இந்த போட்டியில் இவர் வெல்லும் இரண்டாவது வெள்ளி பதக்கம் ஆகும் இதன் மூலம் இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார். தமிழகத்தில் இருந்து இப்போட்டில் கலந்து கொண்டு இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் சேர்த்துள்ளார் கொண்டு இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் சேர்த்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு கொடுக்கபட்ட முக்கியத்துவமும், விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஊக்கங்களுமே தொடர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற சர்வதேச பதக்கங்களைக் குவிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதுவொரு படிப்படியான வளர்ச்சி. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடங்கி, உள்ளூர் அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்று சர்வதேச அளவில் பங்கெடுக்க இயலாதவர்களுக்கு உதவி செய்து அனுப்பி வைப்பதில் தொடங்கி இந்தப் பதக்கங்கள் கிடைப்பது வரையிலும் SDAT யின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

1992ல் தொடங்கப்பட்ட SDAT பல ஆண்டுகளாக பெயரளவில் மட்டுமே இயங்கி வந்தது. போதுமான நிதி மற்றும் ஊக்கங்கள் இன்றி. ஆனால், விளையாட்டுத்துறை அமைச்சராக நமது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றப் பின் SDAT யின் பாய்ச்சல் பெரும் வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது என்பதை எளிதில் மறுக்க இயலாத ஒன்று.

அனைத்துவிதமான சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும், போதைப்பொருட்கள் பயன்பாட்டில் இருந்து வெளிவருதல் போன்றவற்றிற்கு வடிகாலாக இருக்கக் கூடியதில் விளையாட்டுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அதேபோல் பெண் விடுதலைக்கும் அதிக அளவில் விளையாட்டுகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

அதனால், இன்னும் இன்னும் கூடுதலாக தமிழ்நாட்டு குழந்தைகள், இளைஞர்கள் பலவகை விளையாட்டாகளை விளையாடுவதை ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு சென்று பல சாதனைகளில் ஈடுபட வைக்க நாம் அனைவரும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும். கூடவே ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கென்று மைதானங்கள் மற்றும் விளையாட்டு வகுப்புகள், விளையாட்டு ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும். கிராமங்கள் தோறும் ஒருங்கிணைந்த விளையாட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை அரசு நேரடிக் கட்டுப்பாட்டில் கண்காணிக்க வேண்டும்.

உண்மையில் பேசுபொருளாக மாற வேண்டியது இவைதான். ஆனால், எது பேசுபொருளாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதை நேற்று மாலை முதல் அனைவரும் கண்டுதான் வருகிறோம். சிந்தித்துப் பார்த்தால் அவை அனைத்தும் ஊக்கதுடன் அடுத்தடுத்தக் கட்டத்தை நோக்கி நகர இருப்பவர்களை முடக்கும் செயல்பாடே அன்றி வேறு எதுவும் இல்லை என்பதுதான்.

ஒவ்வொரு விளையாட்டுகளிலும் சர்வதேச அளவில் இருக்கும் படிநிலைகள், உச்ச நிலைகள் போன்றவற்றை அறிந்து இருந்தால் இவ்வாறான விவாதங்கள் தொடங்கியே இருக்கப் போவதில்லை என்பதுதான் மறுக்கவியலாத உண்மை.

#இனியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.