நூறுநாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை முடக்கிய ஒன்றிய அரசு – கடுமை காட்டிய கனிமொழி எம்.பி. !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மும்மொழி  கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று 2000 கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த பாஜக ஆட்சி. நல்லவர்கள் போல் தமிழர்கள், மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு  வருகின்றனர்” என்பதாக, மத்திய அரசை சாடியிருக்கிறார், கனிமொழி எம்பி .

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ. 4034 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதை கண்டித்தும், நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!
கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம் அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கனிமொழி எம்பி பேசுகையில், ”100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தி வருகின்றார். நிதி அமைச்சர், விவசாய துறை அமைச்சரை நானும், தமிழக நிதித்துறை அமைச்சரூம் நேரில் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினோம்.. ஒரிரு வாரங்களில் வரும் என்றார்கள். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யவில்லை .இதையடுத்து தமிழக முதல்வர்நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறினார்.

நூறு நாள் வேலை திட்டம்இதையடுத்து 4034 கோடி ரூபாய் தர வேண்டிய பணத்தை 5 மாதங்களாக தரவில்லை என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும் பதில் இல்லை. இதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியது. நாங்கள் போராடியதைக் கண்டு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டன. இதனால் நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. போராட்டத்தை கை விடுங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால், எத்தனை முறை இதுபோன்று உறுதியளித்து தரவில்லை என்ற போது எப்படி இவர்களை நம்ப முடியும்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

ஆகையால் தான், மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் தவறான பொய்யான தகவலை கூறுகிறார். திமுக காங்கிரஸ் கட்சி மத்திய அரசில் இருந்த போது சாதாரண மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.

பரப்புரையில் மோடிபிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு பின்னர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்தனர்.

3 மொழி  கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று 2000 கோடி நிதியை முடித்து வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த பாஜக ஆட்சி. நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு  வருகின்றனர். கல்வி மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மோடி ஆட்சிக்கு மனம் வரவில்லை .

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2024 -25 மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதியைத்தான் ஒதுக்கீடு செய்தார்கள்.  86 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த போது இதில் பத்தாயிரம் கோடி துண்டு விழுவது குறித்து கேள்வி எழுப்பினோம். தேவைப்பட்டால், ஒதுக்கீடு செய்வோம் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இந்த லட்சணத்தில் தான் பாஜக அரசின் பட்ஜெட் உள்ளது. அதனால் தான் பொருத்தது போதும் என்று மக்களுடன் களத்தில் திமுக இறங்கி போராடி வருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதி தரும் வரை நாடாளுமன்றத்திலும், மக்களோடு இணைந்து களத்திலும் திமுக போராடும்” என்றார்.

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.