அட இட்லிக்கு பின்னாடி இம்புட்டு விசயம் இருக்கா ?

சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி புழக்கத்தில் உள்ளது. இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக் என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியரின் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0

அட இட்லிக்கு பின்னாடி இம்புட்டு விசயம் இருக்கா ?

இன்றைய நவீன வாழ்வில் பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆடை அணிகலனில் இருந்து, உணவு பழக்கம் வரை மாறி விட்டன. சில உணவுகள் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதே இல்லை. ஆனாலும் கூட பல நூற்றாண்டாக இருந்து வரும் ஒரு உணவாக ‘இட்லி’ இருக்கிறது. இன்றுவரை அனைவரின் விருப்ப உணவுப் பட்டியலிலும் இது இடம் பிடித்திருக்கிறது. துரித உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்ற ‘இன்ஸ்டன்ட்’ உணவு முறையால் சர்க்கரை, ஊட்டச்சத்துக் குறையாடு போன்ற நோய் பாதிப்புகள் தற்போது மக்களை அதிகம் தாக்குகிறது. இந்த நோய் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் பாரம்பரிய உணவு முறைகள் மறந்து போனதால் தான்.

தெருமுனை பாட்டி கடைகளில் விற்ற இட்லி விற்பனை இன்று அருகி வருகிறது. 20 ரூபாய்க்குள் 2 வகை சட்னியோடு, சாம்பாரும் சேர்த்து, வயிற்றுக்கு இட்லி சாப்பிட்டு தூங்கலாம். அரிசியிலான இட்லி குழந்தை முதல், முதியோர் வரை விரும்பி உண்பதாக இருக்கிறது. மிகப்பிரபல உணவு பட்டியலில் இருப்பினும், கடந்த காலத்தை ஒப்பிடும்போது இதன் விற்பனை சரிந்திருக்கிறது. அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு ஆவியில் வேக வைப்பதால் உடலுக்கு நலம் சேர்க்கிறது. இட்லி பல நூறாண்டுகளாக நம்மூர்களில் அறியப்பட்டு வந்த ஓர் உணவாகும். இட்லியுடன் சேர்க்கும் உளுந்தின் தாயகம் இந்தியாதான். குறிப்பாக தமிழகத்தில் இந்த உளுந்து விளைச்சல் அதிகமிருக்கிறது. சங்க இலக்கியங்களிலும் இந்த உளுந்து பற்றிய குறிப்புகள் இருக்கிறது.

செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவை இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி துவங்கி நடிகை பெயரிலான இட்லி வரையிலும் இட்லிகள் ரகம் ரகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இட்லி தயாரிப்பிற்கான அடிப்படை செயல்முறை ஒன்றுதான், பொருட்கள் சேர்மானமே வித்தியாசப்படுகிறது. பல்வேறு ரகங்களில் இட்லிகள் உள்ளது.

- Advertisement -

இட்லி தோன்றிய வரலாறு !

சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ஆம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதால், இது இந்தியாவின் உணவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று கருதப்படுகிறது. 10-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் மதுரை போன்ற இடங்களில் குடியேறிய  சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு. கி.பி.1130-ஆம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில், `இட்டாரிகா’ என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள். அதேசமயம் சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி புழக்கத்தில் உள்ளது. இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக் என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியரின் ‘வடராதனே’ என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4 bismi svs

இட்லி தினம் தோற்றம்

கோவையில் ஆட்டோ டிரைவராக இருந்த இனியவன்  இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து,  இட்லி தொழிலைக் கற்றுக் கொண்டார். அதன் முயற்சியாக கடந்த 2013-இல், 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார். தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினம் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார். இதையடுத்து மார்ச் 30-ஆம் தேதி உலக இட்லி தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டியப்பனூர் அரசு சித்தா டாக்டர் விக்ரம் குமார்  கூறுகையில், ‘‘உணவில் காலை, இரவு என அனைத்து நேரத்திலும் உண்பதற்கு உகந்த உணவாக இட்லி இருக்கிறது. சிறந்த மருத்துவ குணம் கொண்டிருக்கிறது. இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசி, உளுத்தம் பருப்பில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புகள் நோய் நச்சு முறிவு மருந்தாக உடலில் செயலாற்றுகின்றன. மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டிருப்பதும் இதன் சிறப்பாகும். இட்லி சாப்பிடுவதால் அமினோ அமிலங்கள் பன்மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபாட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும், உடலுக்கான சக்தியும் கிடைக்கிறது’’ என்றனர்.

சமூக ஆர்வலர் குரிசிலாப்பட்டு சன்முகம்  கூறும்போது, ”ஒரு காலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தெருக்கள்தோறும் இட்லிக்கடைகள் இருந்தன. இப்போது உடல்நலம் கெடுக்கும் உணவுக்கடைகளாக பானிபூரி கடைகள் உள்ளிட்டவைகளையே பார்க்க முடிகிறது. நான் மதுரை போகும்போதெல்லாம் அந்த ஊரில் எந்த நேரத்திலும் இட்லி கிடைக்கும். அதற்கு நாலு வைகையான சட்னி வைப்பார்கள், மதுரை  தூங்கா நகரின் அடையாளப் பெருமைக்குரியதான இட்லி மீட்டெடுக்கப்படும் வகையில் அந்த மாவட்ட நிர்வாகம் ‘இட்லி தினம்’ கொண்டாடி, இழந்த நம் பழமை உணவின் மகத்துவத்தை அறியச் செய்வது அவசியம். இட்லி தினத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி அதன் மகத்துவத்தை மீட்டெடுக்க மதுரை முருகன் இட்லி கடை நிர்வாகிகளும் ஈடுபட வேண்டும் வேண்டும், சமூக ஆர்வலர்கள், அமைப்பினரும் இந்த இட்லிக்கான பெருமை காக்கும் பிரசாரங்களை, நிகழ்வுகளை நடத்த வேண்டும்’’ என்றார்.

இட்லி தயாரிக்கும் முறையை அம்மன் கோயில்பதி இல்லத்தரசி நந்தினி விளக்குகிறார். *முதலில் இட்லி அரிசி நான்கு முதல் நான்கரை மணி நேரமும், உளுந்து இரண்டு முதல் இரண்டரை மணி நேரமும் ஊற வைத்தால் போதுமானது. இரண்டையும் ஒன்றாக சேர்த்தோ அல்லது ஒரே நேர அளவிலோ ஊற வைக்கக்கூடவே கூடாது. இட்லி அரிசி & உளுந்து இரண்டையுமே நன்கு அலசிக் கழுவி விட்டு தான் பிறகு ஊற வைக்க வேண்டும். வெந்தயத்தை அரிசி அல்லது உளுந்து இரண்டுடனும் ஊற வைக்கலாம். முதல் நாளே வெந்தயத்தை தனியே ஊற வைத்து சேர்த்தால் எந்த அரிசியிலும் இட்லி மென்மையாக வரும். இட்லி அரிசியை கொஞ்சம் நரநரப்பாகவும், உளுந்தை களி போல மென்மையாகவும் குழைவாகவும் அரைப்பது முக்கியம்.

அரைபடும் உளுந்து ஒரு போதும் சூடேறக்கூடாது. எனவே, அதை கிரைண்டரில் அரைக்கவும், தேவைக்கு சிறிது சிறிதாக நீர் சேர்த்து அரைத்து எடுத்து அவித்து எடுத்தால் மல்லிப்பூ இட்லி ரெடி!

 

 மணிகண்டன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.