அங்குசம் சேனலில் இணைய

ஜில் ஜில் ஒகேனக்கல் அருவி குவிந்த சுற்றுலா பயணிகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜில் ஜில் ஒகேனக்கல் அருவிகுவிந்த சுற்றுலா பயணிகள் ! கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மலையில்  தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் உற்பத்திகிறது , இதன் நீளம் 800 கிமீ. கருநாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்

ஜில் ஜில் ஒகேனக்கல்
ஜில் ஜில் ஒகேனக்கல்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கன்னட மொழியில் ‘ஒகே’ என்றால் புகை என்றும் ‘நக்கல்’ என்றல் கல் என்றும் பொருள்படும். ஒகேனக்கல் என்றால் ‘புகை சூழ்ந்த கல்’ என்று அர்த்தம். உள்ளம் கொள்ளை கொள்ளும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி வர பரிசல்களில் சவாரி செய்யலாம். இந்த அருவியின் நீர் மேட்டூர் அணையை நோக்கி பாய்கிறது. இவ்விடத்தை ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என்றும் அழைக்கின்றனர். ஒகேனக்கல்லில் எண்ணெய் தடவி உடல் முழுவதும் மசாஜ் செய்து விட ஆட்கள் இருக்கிறார்கள். மசாஜ் முடிந்தவுடன் அருவி நீரில் குளித்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒகேனக்கல்லில் ஆட்டுக்கல் மீன் குழம்பு மிகப் பிரபலம். ஒருகாலத்தில் தென்னிந்தி சினிமாவின் சூட்டிங் ஸ்பாட்டாக இருந்தது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்நிலையில் கோடை மழையால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அருவிகள் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இன்று மே-20  காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1200 கன அடியாக உள்ளது.  மிதமான நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ லிங்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிய துவங்கியுள்ளனர்   அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர். மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என பேரிடர் மீட்பு துறை அறிவுறுத்தியுள்ளது , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

தர்மபுரியில் இருந்து சுமார் 47 KM, பென்னாகரத்தில் இருந்து 16 KM
சென்னையிலிருந்து 345 கி.மீ
பெங்களூருலிருந்து ஒகேனக்கல் – 146 கி.மீ
சேலத்திலிருந்து ஒகேனக்கல் – 85 கி.மீ
கோவையிலிருந்து ஒகேனக்கல் – 217 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.