சபாநாயகர் நாற்காலியில் ‘ஒருநாள்’ முதல்வர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சபாநாயகர் நாற்காலியில் ‘ஒருநாள்’ முதல்வர் – பத்தாண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி வரிசை ஆளுங்கட்சிக்கு சரிக்குச் சமமாக இருப்பதுடன் அதன் கேப்டனாக இருக்கும் ராகுல் அடித்து ஆடுகிறார். பா.ஜ.கவினரின் வன்முறைகளைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தபோது, உடனே குறுக்கிட்டு எழுந்த பிரதமர் மோடி, தான்தான் ‘இந்து மதப் பாதுகாவலன்’ என்பது போலவும் இந்துக்களை எல்லாம் வன்முறையாளர்களாக ராகுல் சித்தரிப்பதாகவும் சொன்னார். “ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி பா.ஜ.க.வோ, ஆர்.எஸ்.எஸ்ஸோ, மோடியோ அல்ல” என்று பதிலளித்தார் ராகுல்.

ராகுல்காந்தி - பாராளுமன்றத்தில்
ராகுல்காந்தி – பாராளுமன்றத்தில்

அங்குசம் இதழ்..

அவையை நடத்திக் கொண்டிருந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைதிப்படுத்த முயற்சித்த போது அவரையும் ராகுல் விடவில்லை. “பதவியேற்பின்போது நீங்கள் எனக்கு நேராக வணக்கம் வைத்தீர்கள். மோடிஜிக்கு குனிந்து வணக்கம் வைத்தீர்கள்” என்று ஒரு போடு போட்டார்.

ராகுல் காந்தியைத் தொடர்ந்து பேசிய இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் பேச்சுகளும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தன.. ராகுலுக்கும் இந்தியா கூட்டணியின் மற்ற எம்.பி.க்களுக்கும் பிரதமரில் தொடங்கி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும் குறுக்கீடு செய்து பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வாதங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள், சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லாவுக்குப் பதிலாக வேறு ஒருவர் அமர்ந்ததையும் கவனித்திருக்கலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றை நடத்துவதற்காக அனுபவமிக்க மூத்த எம்.பி.க்கள் சிலர் தேர்வு செய்யப்படுவது நடைமுறை. மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவரான துணை ஜனாதிபதி ஆகியோருக்கு மாற்றாக இந்த எம்.பி.க்கள் அவையை நடத்துவார்கள். தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசா, “எது இந்து மதம்? யார் கடவுள்?” என்று தத்துவார்த்தமான வாதங்களை வைத்த நேரத்தில், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்குப் பதிலாக அந்த இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திக்கொண்டிருந்தவர் உத்தரபிரதேச மாநிலம் டோமாரியாகஞ்ச் தொகுதியின் எம்.பி.யான ஜெகதாம்பிகா பால். அது மட்டுமல்ல, அவர் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.

ஜெகதாம்பிகா பால்
ஜெகதாம்பிகா பால்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஜெகதாம்பிகா பால் முன்னாள் முதலமைச்சரா? எத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தார்? என்று கேட்டால் அதற்கான விடை, அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கும். காரணம், இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஜெகதாம்பிகா பால் முதலமைச்சராக இருந்தது ஒரே ஒரு நாள் மட்டுமே.

காங்கிரஸ் கட்சியில் இருந்து, திவாரி காங்கிரஸ் கட்சிக்கு சென்றவர் ஜெகதாம்பிகா பால். அதன்பிறகு, தன் சகாக்கள் தொடங்கிய அகில பாரதிய லோக்தந்திரிக் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் கல்யாண்சிங் தலைமையிலான பா.ஜ.க. அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சரானார். கல்யாண்சிங் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 1998 பிப்ரவரி 21ல் அகில பாரதிய லோக் தந்திரிக் காங்கிரஸ் தலைவர் நரேஷ் அகர்வால் அறிவிக்க, கல்யாண்சிங் அரசை உடனடியாகக் கலைத்தார் உத்தரபிரதேச கவர்னராக இருந்த ரொமேஷ் பண்டாரி. மறுநாள், புதிய முதல்வராக ஜெகதாம்பிகா பால் பதவியேற்றார். துணை முதல்வரானார் ரமேஷ் அகர்வால்.

இதனை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் கல்யாண்சிங். உடடினடி வழக்காக அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்யாண்சிங் அரசைக் கலைத்தது செல்லாது என்றும், மீண்டும் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் உத்தரவிட்டது. மறுநாளே மீண்டும் முதலமைச்சரானார் கல்யாண்சிங். இதனால்தான் ஜெகதாம்பிகா பால், ‘ஒரு நாள் முதல்வர்’ எனப்படுகிறார்.

அன்றைக்கு உ.பி. மாநில பா.ஜ.க. அரசைக் கலைக்கக் காரணமான ஒரு நாள் முதல்வர் ஜெகதாம்பிகா பால்தான் இப்போது அதே பா.ஜ.க.வின் எம்.பி.யாகவும் மாற்று சபாநாயகராகவும் இருந்து மக்களவையை நடத்துகிறார். காங்கிரசிலிருந்து வெளியேறி, பிறகு காங்கிரசில் சேர்ந்து, மீண்டும் வெளியேறி, பா.ஜ.க. அரசை ஆதரித்து, அந்த அரசைக் கவிழ்த்து, மீண்டும் பா.ஜ.க. எம்.பியாகி.. என ஜெகதாம்பிகா பால் ‘நிறைந்த அனுபவம்’ உள்ளவர்.

‘அரசியல்’ செய்யத் தெரிந்தால் அரசியலில் ஏதேனும் ஒரு நாற்காலி கிடைத்துக் கொண்டே இருக்கும்.

-திருமொழி

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.