அங்குசம் சேனலில் இணைய

கவனத்தை ஈர்த்த காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கை ! சிறப்பு பார்வை !

“நாளை (06.04.2024) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை இருக்குமா? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது“

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் இரத்து செய்யப்படும்.
வேளாண் இடு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு !

க்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியகாந்தி ராகுல்காந்தி, தேர்தல் அறிக்கை தயாரித்த குழுத் தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெளியிட்டுள்ளனர். இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு ”நியாயப் பத்திரம்” என்று பெயரிட்டுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

*ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

*2009ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

*விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டப்பூர்வ ஒப்பளிப்பு வழங்கப்படும்.

*பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்துச் சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

*மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்பப்படும்.

*நாடு முழுவதும் சமூகப் பொருளாதாரச் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்தப் பணி முறை நீக்கப்படும்.

*அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படும். தாய்சேய்நல மையத்தில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

*மனிதக் கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்.

* 2025 முதல் மத்திய அரசு பணிகளில் 50% பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்

* SC , ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.

* ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

* பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் இயற்றப்படும்!.

* தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கத் தனிச் சட்டம்.

*தனிநபர் சட்டங்களில் வரும் மாற்றம், அனைத்துச் சமுதாயத்தினரின் சம்மதம் பெற்ற பிறகே சட்டமாக்கப்படும்.

*அரசு தேர்வுகள் விண்ணப்பக் கட்டணத்தைக் காங்கிரஸ் இரத்து செய்யும்.

*முதியவர்கள், கைம்பெண் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000 உயர்த்தப்படும்.

*21 வயதுக்குக் கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

*மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளைக் களையும் வகையில் மறு ஆய்வு செய்யப்படும்.

*அனைத்து மொழிகளிலும் பிரெய்லி மற்றும் சைகை அங்கீகரிக்கப்படும்.

*அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.

*டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்குப் பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.

*பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்படும்.

*புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு தகுதி வழங்கப்படும். காஷ்மீருக்கும் மாநிலத் தகுதி வழங்கப்படும்.

*தொடர்வண்டிகளில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும்.

*உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.

*மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்துக் கல்விக்கடன்களும் இரத்து செய்யப்படும்.

*பாஜக கொண்டுவந்த ஜி.எஸ்.டி. சட்டம் இரத்து செய்யப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி. (2.0) கொண்டுவரப்படும்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

*மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

*100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும். நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும்.

*ரூ.25 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். தேசியக் கல்விக் கொள்கையை மாநில அரசுகளுடன் கலந்தாராய்ந்து திருத்தி அமைக்கப்படும். அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*முப்படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டம் இரத்து செய்யப்படும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

*வாக்களிக்கும்போது வாக்காளர் ஒப்புகைச் சீட்டைப் பார்த்த பிறகு பெட்டியில் போடும் நடைமுறை அமல்படுத்தப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படாது .

*அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும்.

*நிதி ஆயோ திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும். பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

*பா.ஜ.க. ஆட்சியில் வெளிநாடுகளுக்குக் குற்றவாளிகள் தப்பிச்சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும். பா.ஜ.க.வுக்கு மாறியதால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். தேர்தல் பத்திர முறைகேடு, பி.எம். கேர்ஸ், ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.

*பால்புதுமையினர் (LGBTQIA+) நலச் சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும். LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.

*பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

*செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

*10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.

*மீனவர்களுக்காகக் கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்படும், மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும். வேளாண் இடு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.

*பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதைத் தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.

*ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலைகள் தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்.

*மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.

*பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.

*குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்எஸ் சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்காக நேரடி சந்தைகள் அமைக்கப்படும்.

*திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள் களையப்படும்.

*ஊடகச் சுதந்திரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்.

*அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க இலக்கு.

* இலங்கையால் நடத்தப்படும் படகுகள் பறிமுதல், மீனவர்கள் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*தேசிய அளவில் குறைந்தபட்சத் தினசரி ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும்.

*ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

*மாலத்தீவுடனான உறவைச் சீர்செய்வதாகவும், சீனாவுடனான நமது எல்லையில் இருந்த நிலையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்..

*நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும. வெறுப்பு பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

-ஆதவன்

***

 “நாளை (06.04.2024) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை இருக்குமா? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது“

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.