காதலுக்கு எதிர்ப்பு….சப் இன்ஸ்பெக்டர் தம்பதி தஞ்சமடைந்தது எங்கே தெரியுமா? இவங்களுக்கே இந்த நிலைமையா?
காதலுக்கு எதிர்ப்பு….சப் இன்ஸ்பெக்டர் தம்பதி தஞ்சமடைந்தது எங்கே தெரியுமா? இவங்களுக்கே இந்த நிலைமையா?
தென்காசி அருகே 3 ஆண்டுகளாக காதலித்து வந்த சப் இன்ஸ்பெக்டர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவம்மாள். அவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பட்டாலியனில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இருவருமே காவல் துறையில் எஸ்ஐகளாக பணியாற்றி வருகிறார்கள்.
இதனால் இருவருக்கும் அவ்வப்போது பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளாகவே இவர்கள் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல் எல்லா காதலுக்கு இருப்பதை போல் இந்த காதலுக்கும் எதிர்ப்பு வர ஒரே காரணம் இருவரும் மாற்று ஜாதியினர்.
இதனால்தான் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்களை மருமகனாகவும் மருமகளாகவும் ஏற்க இரு தரப்பினரும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இரு தரப்பு பெற்றோரையும் சமாதானம் செய்ய பல்வேறு முயற்சிகளை செய்த நிலையில் அது முடியவில்லை என்பதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்த விஷயம் பெற்றோர்களுக்கு தெரியவே அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆயுதங்களுடன் இவர்களை பெற்றோர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த சப்இன்ஸ்பெக்டர் காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மிகவும் கொதிப்பில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் இருவரும் பாதுகாப்பு கோரி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு கட்டத்தில் இனி நாங்கள் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம் என உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
பொதுவாக பொதுமக்களுக்கு இது போன்ற பிரச்சினை என்றால் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைவார்கள், போலீஸ்காரர்களுக்கே பிரச்சினை என்றால்! வேறெங்க அவர்களும் போலீஸ் நிலையத்தில்தான்!