உள்ளேன் ஐயா ! ஓ.பி.எஸ். என்ட்ரி !
உள்ளேன் ஐயா ! ஓ.பி.எஸ். என்ட்ரி !
மகனின் நாடாளுமன்ற பதவி பறிப்பு, வீதிக்கு வந்த குடும்ப பஞ்சாயத்து என அப்செட்டில் இருந்த ஓ.பி.எஸ்., எடப்பாடியாரின் எழுச்சியை யடுத்து, அரசியல் களத்தில் நானும் ”உள்ளேன் ஐயா” என இருப்பை உத்தரவாதப் படுத்துவதற்கான முனைப்பில் இறங்கியிருக்கிறாராம்.
சென்னை நந்தனத்தில் உள்ள தலைமையகமாக கொண்டு ஐ.டி.விங்கை ஆரம்பித்த தோடு, மாவட்டம் தோறும் அதிமுக தொண்டர்களை தொலைபேசியில் அழைத்து சர்வே எடுத்து வருகிறார்களாம்.
யாரெல்லாம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்? யாரெல்லாம் எதிராக இருக்கிறார்கள்? அவர்களின் மனநிலை என்ன? என்பதெல்லாம் சேகரிக்க திட்டமாம். இதற்காக தனியே வாட்சப் குழுவையும் ஒருங்கி ணைத்து வருகிறார்களாம். ஆதரவாளர்களிடையே அண்ணனே போனில் பேசுவார் என சொல்கிறார்களாம்