அது எப்படி சாதாரண சார்ஜர் விஷமா மாறும்?
நம் வீடுகளில் செல்போன் சார்ஜர் வேலை செய்யலைன்னா, அல்லது இயர்போன் ஒயர் பிஞ்சு போயிட்டாலோ நாம என்ன பண்ணுவோம்? வீட்டை சுத்தம் பண்ணும் போது, அதை அப்படியே கொண்டு போய் வீட்ல இருக்குற சாதாரண குப்பைத் தொட்டியில சாப்பாட்டுக் கழிவுகளோடு சேர்த்துப் போட்டு விடுவோம்.
பார்க்கிறதுக்கு இது ரொம்ப சாதாரண விஷயமா தெரியலாம். ஆனா, ஒரு சின்ன சார்ஜரை சாதாரண குப்பையோடு குப்பையாக வீசுவது, பல ஆயிரம் பேரின் குடிநீரில் விஷம் கலப்பதற்குச் சமம்!
அது எப்படி சாதாரண சார்ஜர் விஷமா மாறும்?
ஒரு சின்ன சார்ஜருக்குள்ள அல்லது கேபிளுக்குள்ள வெறும் பிளாஸ்டிக் காப்பர் மட்டும் கிடையாது. அதுக்குள்ள ‘லெட்’ , ‘காட்மியம்’ , ‘பெரிலியம்’ மற்றும் பாதரசம் போன்ற மிகக் கொடிய ரசாயன உலோகங்கள் இருக்கு.
நீங்க குப்பையில போடுற அந்த சார்ஜர், கடைசியா ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற பெரிய குப்பை மேட்டுக்குத் தான் போகும். அங்க மழை பெய்யும் போது, அந்த சார்ஜருக்குள் இருக்கும் கொடிய ரசாயனங்கள் கொஞ்சம் கொஞ்சமா கரைந்து, நேராகப் பூமிக்கு அடியில் இருக்கும் நிலத்தடி நீரில் கலக்கும். இதை அறிவியலில் “Leaching” என்று சொல்வார்கள்.
அதே நிலத்தடி நீரைத் தான் நாம போர்வெல் மூலமா குடிநீராவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்துறோம். இந்த ரசாயனம் கலந்த தண்ணீரைக் குடிப்பதால தான், இன்னைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்குக் கூட கேன்சர் , நரம்பியல் கோளாறுகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் சர்வ சாதாரணமாக வருதுன்னு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறாங்க.
அதுமட்டுமில்லாம, சில சார்ஜர்கள்ல உள்ளே சின்ன கெப்பாசிட்டர்கள் இருக்கும். குப்பை வண்டிகள்ல அதை நசுக்கும் போது அதிலிருந்து வெளியாகும் தீப்பொறி, மொத்த குப்பை மேட்டையும் எரிக்கக்கூடிய அளவுக்குப் பெரிய தீவிபத்துகளை உருவாக்குது (உதாரணத்துக்கு அடிக்கடி நடக்கும் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு தீவிபத்துகள்).
அப்போ பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை என்னதான் பண்றது?
மின்னணு கழிவுகளை எப்பவுமே சாதாரண குப்பைகளோட சேர்க்கவே கூடாது. பழுதான போன், சார்ஜர், பேட்டரி, உடைந்த ரிமோட் என அனைத்தையும் தனியாக ஒரு டப்பாவில் சேர்த்து வையுங்கள். அதைத் தெருவில் வரும் பழைய இரும்பு வியாபாரிகளிடமோ, அல்லது மொபைல் ஷோரூம்களில் இருக்கும் ‘E-Waste Recycling’ தொட்டிகளிலோ போடுவது தான் நல்லது.
நம்மளோட ஒரு சிறிய தவறால் ஒட்டுமொத்த பூமியையும், நம்ம அடுத்த தலைமுறையையும் கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு இருக்கு.




Comments are closed, but trackbacks and pingbacks are open.