பர்ஃபெக்ட் பன்னீர் சீஸ் பால்ஸ் ! சமையல் குறிப்பு – 15
வணக்கம், சமையலறை தோழிகளே! குட்டீஸ்க்கு பிடிச்ச வகையில இன்னைக்கு நாம்ப செய்யப் போற ஸ்நாக்ஸ் ரெசிபி பன்னீர் சீஸ் பால்ஸ், குறிப்பா இதை பாத்தீங்கன்னா அந்த சீஸ் பால் கடிக்கும் போது உள்ள ஸ்டாப் பண்ண சீஸ் அப்படியே உருகி வரும் பசங்க அதை பார்க்கும்போது நல்லா என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க. வாங்க! இதை எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய பனீர் 200 கிராம், நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, காஷ்மீர் ரெட் சில்லி பவுடர் 1 ஸ்பூன், சாட் மசாலா 1 ஸ்பூன், கடலை மாவு 4 டேபிள் ஸ்பூன், சோள மாவு 4 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பிரட் கிரம்ஸ் தேவையான அளவு, எண்ணெய் பொறிக்க தேவையான அளவு, சீஸ் க்யூப்ஸ் தேவையான அளவு.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, காஷ்மீர் மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் சாட் மசாலா, கடலை மாவு, சோள மாவு, உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். இரண்டு ஸ்பூன் சோளமாவை தண்ணீரில் கலந்து கோட்டிங்கிற்காக தனியே வைத்துக் கொள்ளவும். ஒன்றாக பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதனை தட்டை செய்து அதனுள் நறுக்கி வைத்த சீஸ் க்யூப்ஸ் ஒன்று வைத்து உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பிடித்து வைத்த உருண்டைகளை சோள மாவில் உருட்டி பின் பிரட் கிரம்சில் தடவி காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான மொறு மொறுப்பான பனீர் சீஸ் பால்ஸ் ருசிக்க தயார். இதனை வழக்கம்போல் மயோனைஸ் அல்லது கிச்சப் கீரின் சாஸ் இவற்றுடன் சுவைத்து சாப்பிடலாம்.
— பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.